சந்திரமுகியாக முழுசாக மாறப்போகும் நாயகி யார் தெரியுமா.. பார்க்கலாம் வாங்க!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2005ல் வெளியானது சந்திரமுகி.
ரஜினியின் கேரியரில் பெஸ்ட்டான படங்களில் இந்தப் படமும் இடம்பெற்றது. சிறப்பான திரைக்கதையால் படம் மிகவும் சிறப்பான வெற்றியை பெற்றது.
நடிகர் வடிவேலு, ரஜினிகாந்த் காமெடி காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும் படத்திற்கு கூடுதல் ப்ளஸ்.

சந்திரமுகி படம்
நடிகர் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ல் வெளியான படம் சந்திரமுகி. ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்ட நாயகியை அதிலிருந்து மீட்டெடுக்கும் டாக்டர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் சிறப்பாக நடித்திருப்பார். இதில் அமானுஷ்யங்களையும் சேர்த்திருந்தார் இயக்குநர் பி. வாசு.

மலையாள ரீமேக்
மலையாள படத்தின் ரீமேக்காக வெளியான இந்தப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சிறப்பான திரைக்கதையுடன் அவர் கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினி, பிரபு உள்ளிட்டவர்களை நடிப்பால் பீட் செய்திருப்பார் ஜோதிகா. நயன்தாராவின் ப்ரெஷ் லுக்கும் படத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. ஐயா படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்திருந்தார் அவர்.

மிரட்டிய ஜோதிகா
படத்தில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிரட்டலாக அமைந்தது. மலையாளத்தில் இந்த கேரக்டரை ஷோபனா செய்திருந்தார். அவர் நடனத்தால் மிரட்டிய நிலையில், ஜோதிகா நடிப்பால் மிரட்டினார். படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்தன. குறிப்பாக ரா ரா பாடல் மற்றும் அதன் காட்சி அமைப்பு சிறப்பாக அமைந்தது.

சந்திரமுகி 2 குறித்த அறிவிப்பு
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பை தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. முன்னதாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் இந்தப் படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில், தற்போது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படத்தின் நாயகிகள்
இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், வடிவேலு நடிப்பதும் உறுதியாகியுள்ளது. இதனிடையே, படத்தின் நாயகி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தில் ராஷி கண்ணா அல்லது ஆன்ட்ரியா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Recommended Video

விரைவில் சூட்டிங்
இதேபோல விரைவில் சூட்டிங்கை துவக்கவும் லைகா திட்டமிட்டுள்ளது. ஒரேகட்டமாக சூட்டிங்கை முடித்து விரைவிலேயே ரசிகர்களுக்கு விருந்தாக்கவும் திட்டமிட்டுள்ளது. படம் சந்திரமுகி கதையை ஒட்டி இருக்குமா அல்லது முற்றிலும் வித்தியாசமான கதையை வாசு கையிலெடுத்துள்ளாரா என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











