இன்னும் சில தினங்களில் சந்திரமுகி 2 படத்தோட அறிவிப்பு.. எந்த விழாவில் அறிவிக்கப் போறாங்க தெரியுமா?

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் சந்திரமுகி.

இந்தப் படத்தை இயக்குநர் வாசு இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் மிரட்டலான திரைக்கதை, காமெடி உள்ளிட்டவை ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் லிஸ்ட்டில் உள்ளவை.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

சந்திரமுகி படம்

சந்திரமுகி படம்

இயக்குநர் வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ல் வெளியான படம் சந்திரமுகி. த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் திரைக்கதை சிறப்பாக அமைந்திருந்தது. மலையாளப் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் அது தெரியாத அளவில் இந்தப் படம் அமைந்திருந்தது.

மிரட்டலான நடிப்பு

மிரட்டலான நடிப்பு

இந்தப்படம் நயன்தாராவிற்கு சிறப்பான என்ட்ரியை தமிழில் கொடுத்தது. ஐயா படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் நயன்தாரா ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். படத்தில் ஜோதிகா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். முன்னதாக இந்தக் கேரக்டரில் நடிக்க சிம்ரனிடம் தான் பேசப்பட்டதாம். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

சந்திரமுகி 2 படம்

சந்திரமுகி 2 படம்

இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது ருத்ரன், துர்கா உள்ளிட்ட படங்கள் பென்டிங்கில் உள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 6ல் அறிவிப்பு

ஜூன் 6ல் அறிவிப்பு

இதனிடையே இந்தப்படத்தின் அறிவிப்பு இன்னும் இரு தினங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. லைகா தயாரிப்பான டான் படம் தற்போது திரையரங்குகளில் 25வது நாளை வெற்றிகரமாக கடக்கவுள்ள நிலையில், அதை விழாவாக வரும் 6ம் தேதி கொண்டாட லைகா திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்தான் சந்திரமுகி 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

டைட்டிலுக்காக ஒரு கோடி ரூபாய்

டைட்டிலுக்காக ஒரு கோடி ரூபாய்

இந்தப் படத்தின் டைட்டிலை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து லைகா கைப்பற்றியுள்ளது. இதற்காக அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டான் படம் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளதால் அந்நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X