ஆஹா.. செம அப்டேட்.. சந்திரமுகி 2 படப்பிடிப்பை தொடங்கும் லாரன்ஸ்.. எப்போன்னு பாருங்க!

சென்னை: சந்திரமுகி 2 படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், விஜயகுமார் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர்.

இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரி குவித்தது.

வேட்டையனாக லாரன்ஸ்

வேட்டையனாக லாரன்ஸ்

பி வாசு இயக்கியிருந்த இந்தப் படத்தின் சீக்குவலாக சந்திரமுகி 2 படத்தை இயக்க பி வாசு திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தப் படத்தில் ரஜினி நடிக்க முடியாத காரணத்தால் சந்திரமுகி 2 படத்தில் ரஜினியின் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் லாரன்ஸ் நடிப்பார் என கூறப்பட்டது.

நிச்சயம் தொடங்கும்

நிச்சயம் தொடங்கும்

ஆனால் அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் சந்திரமுகி 2 படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 கைவிடப்படவில்லை. நிச்சயம் தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

விரைவில் முடியும்

விரைவில் முடியும்

தற்போது லாரன்ஸ், கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் ஷெட்யூல் அண்மையில் முடிந்த நிலையில் சந்திரமுகி 2 பணியை தொடங்குவதற்கு முன்பாக ருத்ரன் படத்தை முடித்து விடுவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X