என்னடா இதெல்லாம்... கடவுளே.. இதென்ன சந்திரமுகிக்கு வந்த சோதனை.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: சந்திரமுகி படத்தின் ரா ரா பாடல் ட்ரோல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சந்திரமுகி திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளியானது. பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் பி வாசு இப்படத்தை இயக்கியிருந்தார்.
இதில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.
நல்ல வரவேற்பு
இதில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார். அவரது நடிப்பு இந்தப் படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

ராரா பாடல்
இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ஹிட்டடித்தது. குறிப்பாக ஜோதிகா சந்திரமுகியாக மாறி பாடும் ராரா பாடலும் அதற்கான ஆட்டமும் பெரிதும் பேசப்பட்டது.

ராரா பாடல் ட்ரோல்
இந்நிலையில் இந்த பாடலை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் பாதிப் பாடல் ரா ரா பாடலாகவே உள்ளது.

கும்முறு டப்புறு
மீதி பாதி பாடல் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற கும்முறு டப்புறு என்ற பாடலை கலந்தடித்துள்ளனர். அந்தப் பாடலும் ஜோதிகாவின் லிப் மூவ்மென்ட்ஸ்க்கு ஏற்ப அப்படியே அசலை போல் உள்ளது.

நடிகை லைக்ஸ்
இந்த ட்ரோல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ரம்யா நம்பீசன் இந்த வீடியோவை லைக் செய்துள்ளார்.
யார் பார்த்த வேலைடா?
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை என்ஜாய் செய்து வருகின்றனர். பலரும் ஸ்மைலிகளை பகிர்ந்து வரும் நிலையில் யார் பார்த்த வேலைடா இது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











