twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிகாலை 4 மணிக்கே சந்திரமுகி ரிலீஸ்: ரசிகர்கள் பாலாபிஷேகம், மதுரையில் அடிதடி தேங்காய் உடைக்கும் ரஜினி பக்தர்கள் வழக்கம்போல் பாலாபிஷேகம், தேங்காய் உடைப்பு, கற்பூர ஆரத்தியுடன் ரஜினியின் சந்திரமுகி படம் நேற்று ரிலீஸ் ஆனது. பல இடங்களில்அதிகாலை 4 மணிக்கே படம் திரையிடப்பட்டது.சென்னை உதயம் காம்ப்ளக்ஸில் ரஜினியின் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் படம் பார்த்தனர்.தமிழகத்தில் சந்திரமுகி திரையிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்திலும் ரஜினி ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். இதனால் அந்தப்பகுதிகளே திருவிழாக் கோலம் அடைந்தன. சென்னை உதயம் தியேட்டரில் கூடிய கூட்டம் அட்டர் பிளாப்பான பாபா படத்துக்குப் பின் சந்திரமுகி வெளியாகியிருப்பதால் இப்படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்ற ஆர்வம்ரசிகர்களின் முகங்களில் தெரிந்தது.தியேட்டர்களில் ரஜினியின் விதவிதமான கட்- அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள் என்று கலகலப்பாக சந்திரகியை வரவேற்றனர்.சென்னையில் சந்திரமுகி வெளியிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்திலும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. இதுவரைஇந்த அளவுக்கு கூட்டம் வந்ததில்லை என்று தியேட்டர் ஊழியர்கள் கூறுகிறார்கள். வாகனங்களில் ஊர்வலமாய் படம் பார்க்க வந்த ரசிகர்கள் பாலாபிஷேகம்:கட் அவுட்களுக்கு பாலாபிஷேம் செய்தும், கற்பூரம் காட்டியும் படத்தை தொடங்கி வைத்தனர் ரசிகர்கள்.கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டர் வளாகத்தில் மொத்தம் 6 தியேட்டர்கள் உள்ளன. இதில் 3 தியேட்டர்களில் சந்திரமுகி, 2தியேட்டர்களில் சச்சின், ஒரு தியேட்டரில் மும்பை எக்ஸ்பிரஸ் திரையிடப்பட்டுள்ளது.இந்தத் தியேட்டரில் பால்கனி வகுப்புக்கு ரூ. 225 எனவும், முதல் வகுப்பு ரூ. 175, இரண்டாம் வகுப்பு ரூ. 125 என டிக்கெட் கட்டணம்நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் விலையைப் பற்றிக் கவலைப்படாமல் வாங்கிச் சென்றனர்.படம் பார்க்க வந்த தனுஷ்-ஐஸ்வர்யா:உதயம் காம்ப்ளக்ஸில் படம் பார்ப்பதற்காக ரஜினியின் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் வந்தனர்.ரசிகர்கள் கூட்டத்தில் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தனுஷை ரசிகர்கள் அலாக்காக தூக்கி சந்தோஷத்தில் கூத்தாடினர்.ரொம்பக் கஷ்டப்பட்டு தனுஷை போலீஸாரும், திரையரங்க ஊழியர்களும் மீட்டு உள்ளே கொண்டு சென்றனர்.மதுரையில் ரசிகர்கள் வன்முறை:மதுரையில் சந்திரமுகி திரையிடப்பட்டிருந்த சிந்தாமணி தியேட்டரில் ரசிகர்களின் ஓவர் உற்சாகம் காரணமாக பெரும் கலாட்டா ஏற்பட்டது.சந்திரமுகியைப் பார்ப்பதற்காக வியாழக்கிழமை அதிகாலை 4 மணி அளவிலேயே பெருமளவில் ரசிகர்கள் திரண்டு விட்டனர்.இப்போதே படத்தை ஓட்டு என்று கூறி ரகளையில் இறங்கினர். இதையடுத்து 4 மணிக்கே படம் போடப்பட்டது. பாடல் காட்சிகளின்போதுரசிகர்கள் ஓவராக ஆடத் தொடங்கியதால், இருக்கைகள் பல சேதமடைந்தன.சென்னை சாந்தி தியேட்டரில் கூடிய கூட்டம்

    By Staff
    |
    தேங்காய் உடைக்கும் ரஜினி பக்தர்கள்

    வழக்கம்போல் பாலாபிஷேகம், தேங்காய் உடைப்பு, கற்பூர ஆரத்தியுடன் ரஜினியின் சந்திரமுகி படம் நேற்று ரிலீஸ் ஆனது. பல இடங்களில்அதிகாலை 4 மணிக்கே படம் திரையிடப்பட்டது.

    சென்னை உதயம் காம்ப்ளக்ஸில் ரஜினியின் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் படம் பார்த்தனர்.

    தமிழகத்தில் சந்திரமுகி திரையிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்திலும் ரஜினி ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். இதனால் அந்தப்பகுதிகளே திருவிழாக் கோலம் அடைந்தன.

    சென்னை உதயம் தியேட்டரில் கூடிய கூட்டம்

    அட்டர் பிளாப்பான பாபா படத்துக்குப் பின் சந்திரமுகி வெளியாகியிருப்பதால் இப்படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்ற ஆர்வம்ரசிகர்களின் முகங்களில் தெரிந்தது.

    தியேட்டர்களில் ரஜினியின் விதவிதமான கட்- அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள் என்று கலகலப்பாக சந்திரகியை வரவேற்றனர்.

    சென்னையில் சந்திரமுகி வெளியிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்திலும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. இதுவரைஇந்த அளவுக்கு கூட்டம் வந்ததில்லை என்று தியேட்டர் ஊழியர்கள் கூறுகிறார்கள்.

    வாகனங்களில் ஊர்வலமாய் படம் பார்க்க வந்த ரசிகர்கள்

    பாலாபிஷேகம்:

    கட் அவுட்களுக்கு பாலாபிஷேம் செய்தும், கற்பூரம் காட்டியும் படத்தை தொடங்கி வைத்தனர் ரசிகர்கள்.

    கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டர் வளாகத்தில் மொத்தம் 6 தியேட்டர்கள் உள்ளன. இதில் 3 தியேட்டர்களில் சந்திரமுகி, 2தியேட்டர்களில் சச்சின், ஒரு தியேட்டரில் மும்பை எக்ஸ்பிரஸ் திரையிடப்பட்டுள்ளது.

    இந்தத் தியேட்டரில் பால்கனி வகுப்புக்கு ரூ. 225 எனவும், முதல் வகுப்பு ரூ. 175, இரண்டாம் வகுப்பு ரூ. 125 என டிக்கெட் கட்டணம்நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் விலையைப் பற்றிக் கவலைப்படாமல் வாங்கிச் சென்றனர்.

    படம் பார்க்க வந்த தனுஷ்-ஐஸ்வர்யா:

    உதயம் காம்ப்ளக்ஸில் படம் பார்ப்பதற்காக ரஜினியின் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் வந்தனர்.ரசிகர்கள் கூட்டத்தில் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தனுஷை ரசிகர்கள் அலாக்காக தூக்கி சந்தோஷத்தில் கூத்தாடினர்.

    ரொம்பக் கஷ்டப்பட்டு தனுஷை போலீஸாரும், திரையரங்க ஊழியர்களும் மீட்டு உள்ளே கொண்டு சென்றனர்.

    மதுரையில் ரசிகர்கள் வன்முறை:

    மதுரையில் சந்திரமுகி திரையிடப்பட்டிருந்த சிந்தாமணி தியேட்டரில் ரசிகர்களின் ஓவர் உற்சாகம் காரணமாக பெரும் கலாட்டா ஏற்பட்டது.

    சந்திரமுகியைப் பார்ப்பதற்காக வியாழக்கிழமை அதிகாலை 4 மணி அளவிலேயே பெருமளவில் ரசிகர்கள் திரண்டு விட்டனர்.

    இப்போதே படத்தை ஓட்டு என்று கூறி ரகளையில் இறங்கினர். இதையடுத்து 4 மணிக்கே படம் போடப்பட்டது. பாடல் காட்சிகளின்போதுரசிகர்கள் ஓவராக ஆடத் தொடங்கியதால், இருக்கைகள் பல சேதமடைந்தன.

    சென்னை சாந்தி தியேட்டரில் கூடிய கூட்டம்
    இதையடுத்து தியேட்டர் ஊழியர்கள் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரசிகர்களுக்கும், ஊழியர்களுக்கும் மோதல்ஏற்பட்டது. இதனால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டர் ஸ்க்ரீனை கிழித்தனர். இதையடுத்து போலீஸார்வரவழைக்கப்பட்டனர்.

    ஆனால் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த ரசிகர்கள் போலீஸாரையும் தாக்கத் தொடங்கினர். இதையடுத்து கடுப்பான போலீசார் தடியடிநடத்தி ரசிகர்களை ஓட, ஓட விரட்டியடித்தனர்.

    ரசிகர்கள தாக்குதலில் சப் இன்ஸ்பெக்டர் அப்துல் கபூர், போலீஸ்காரர் மும்மூர்த்தி ஆகிய இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக 23 ரசிகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    மதுரையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை 4 மணிக்கே சந்திரமுகி படம் ஓட்டப்பட்டது. சேலத்தில்நள்ளிரவு 2 மணிக்கு படத்தை ஓட்டு தியேட்டர் நிர்வாகமும் ரஜினி ரசிகர்களும் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்க மாவட்ட எஸ்.பி.பொன் மாணிக்கவேல் மறுத்துவிட்டார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X