twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தண்ணீர் துளியை பார்க்க அனுப்பிய சிவனின் கண்ணீர்துளியை பார்க்கவைத்த சந்திரனே !

    |

    Recommended Video

    did modi disappointed with isro ?

    சென்னை: வடதுருவத்தில் பாட்டி வடையும்! தென் துருவத்தில் நிலா சோறும்! சுவைத்தபடி நங்கள் நடந்து செல்வோம்! முயற்சி எனும் கயிறை ஒரு போதும் விடமாட்டோம்! என்று நடிகை நித்யா கவிதை பாடியுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நமக்கு மிகவும் பரிச்சயமான முகம் நித்யா ரவீந்திரன். தனது சிறு
    வயதிலேயே பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு கதாநாயகியாக நடித்தவர். இவரது தந்தை ஒரு அரசாங்க அதிகாரியாக இருந்தாலும் நாடகங்கள் நடத்துவதை ஒரு பொழுதுபோக்காக நடத்தியவர். அவர் நடத்திய அத்தனை நாடகங்களிலும் குழந்தை நட்சத்திரமாக அரிதாரம் பூசியவர் நித்யா. பிறகு இயக்குனர் விசு, மௌலி போன்றவர்களின் பட்டறையில் கலக்கியவர்.

    chandrayaan 2 actress nithya lyrics

    80களில் தெலுங்கு படங்களில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் சகோதரியாக நடித்தவர் என்ற பெருமையும் உண்டு. தனது சிறு வயதிலேயே தந்தையின் அறிவுரையின்படி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திரைத்துறையில் நுழைந்து அவரது திறமையை வெளிகொண்டு வந்தார். பெரிய திரை, சின்னத்திரை மட்டுமின்றி திரைக்கு வெளியேயும் பல திறைமைகளை கொண்டுள்ளவர்.

    தரக்குறைவாக பேசிய நெட்டிசன்.. நச் பதிலடி கொடுத்த பார்த்திபன்! அப்ளாஸை அள்ளிக்கொடுத்த ரசிகர்கள்!தரக்குறைவாக பேசிய நெட்டிசன்.. நச் பதிலடி கொடுத்த பார்த்திபன்! அப்ளாஸை அள்ளிக்கொடுத்த ரசிகர்கள்!

    நடிப்போடு மட்டுமின்றி பல சீனியர் கதாபாத்திரங்களுக்காக டப்பிங் சேய்து வருகிறார். படு பிஸியாக இருந்தாலும் தமிழ் மீது அவருக்கு தீராத தாகம் உண்டு. அந்த வகையில் தற்போது நிகழ்த்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டதையும் அது சில காரணங்களால் தனது தொடர்பு கொள்ளும் தன்மையை இழந்தது குறித்தும் அவரது பதிவை ஒரு கவிதையாக பதிவிட்டுள்ளார்.

    chandrayaan 2 actress nithya lyrics

    " எப்படியாவது தொடர்புகொள், இதுதான் வேண்டுவது !
    தண்ணீர் துளியை பார்க்க அனுப்பிய சிவனின் கண்ணீர்துளியை பார்க்கவைத்த சந்திரனே !
    தொடும் தூரத்தில் இருக்கிறோம் தொடர்பு தான் துண்டித்தது!
    சுற்றித்தான் வருகிறோம் சமிக்ஞை தான் நின்றது !
    படம் பிடிக்கும் நேரத்தில் வெட்கத்தில் தட்டினாயோ !
    அமாவாசைவந்ததென்று
    மறந்து பொய் மாற்றினாயோ !
    இந்தியனே வா என்று அரவணைப்பில் அழுத்தினாயோ !
    உலகமே கேள் என்று மௌனத்தை அனுப்பினாயோ !

    உன் மறுபக்கத்தை காண ஆசைப்பட்டது எம் இனம்!
    மனம் இறுக்கம் சேர்ந்து விட அசைவற்று போனது பூமியும்!
    தனியான லேண்டரை பார்த்துகொள்!
    துணையாக இருக்கட்டும் வைத்துக்கொள்!
    ஒரு நாள் இந்தியா வந்து செல்!
    சிவனின் உழைப்பை பார்த்து செல்!
    விரைவில் வருவோம் தமிழில் கதைத்தபடி,
    வரவேற்க காத்திரு வெற்றிலை பாக்குடன்!
    கரம் நீட்டி வாவென்று சொல்!

    கறைகளை துடைத்து விட்டு திரும்புவோம்!
    வடதுருவத்தில் பாட்டி வடையும்!
    தென் துருவத்தில் நிலா சோறும்!
    சுவைத்தபடி நங்கள் நடந்து செல்வோம்!
    முயற்சி எனும் கயிறை ஒரு போதும் விடமாட்டோம்!

    உன் மேலே பாரத கோடி பட்டொளி வீசும் !
    தலை நிமிர்ந்து பார்த்த படி சரித்திரம் பேசும்!
    எங்களின் சிவனின் குரல் உடைந்தது!
    இந்தியர்களின் இதயத்தில் தடை தட்டியது!
    எங்கோ இருக்கும் உனக்கு யார் சொல்வது?
    எப்படியாவது தொடர்பு கொள் - இதுதான் வேண்டுவது!
    எப்படியாவது தொடர்பு கொள் -இதுதான் வேண்டுவது.
    ஜெய் ஹிந்த்! ஜெய் இஸ்ரோ !

    English summary
    Actress nithya lyrics about Chandrayan 2 vikram lander. Chandrayaan-2: Isro, not losing hope, continues to make all out efforts to restore link with lander 'Vikram'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X