ஆம்பள சட்டையில் அச்சச்சோ போஸ்.. பிரபல நடிகையின் 'ஐயையோ' போட்டோஷூட்.. தெறித்து மிரளும் ஃபேன்ஸ்!

By

சென்னை: ஆம்பள சட்டையில் பிரபல நடிகை எடுத்துள்ள ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் தீயாகப் பரவி வருகின்றன.

கொரோனா லாக்டவுன், நடிகைகளை இன்ஸ்டாவுக்குள் தள்ளி இருக்கிறது இனிமையாக. பெரும்பாலான நடிகைகள், அதில் தங்கள் போட்டோக்களை தினமும் பதிவேற்றி வருகின்றனர்.

தங்களது ஒர்க் அவுட்-டில் இருந்து டான்ஸ், சமையல் வீடியோ வரை அனைத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

கிளாமரில் கிறங்கடிப்பார்

கிளாமரில் கிறங்கடிப்பார்

இதற்கென ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்களும் வாவ், சூப்பர், செம என்று வர்ணிக்கும் வார்த்தைகளால் அவர்களை புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதை ரசிக்கும் சில நடிகைகள் இன்ஸ்டாவை கிளாமர் ஸ்டில்களால் இஷ்டத்துக்கு சூடேற்றி வருகிறார்கள்.
அவர்களில் ஒருவர், நடிகை சந்திரிகா ரவி. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கிளாமர் போஸ்களில் கிறங்கடிப்பார்.

ஹாட் போட்டோஷூட்

ஹாட் போட்டோஷூட்

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி நடிகையான இவர், பிரபல மாடலும் கூட. இந்த கொரோனா லாக்டவுனில் வசிப்பது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில். தினமும் தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை அள்ளிவிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டு வருகிறார். அதற்காகவே அவரது பக்கத்துக்கு ஏகப்பட்ட பாலோயர்கள். இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் வைரலாகி வருகிறது.

ஆம்பள சட்டை

ஆம்பள சட்டை

இன்றைய போட்டோவில் பிகினி டிரெஸ்சின் மேலே ஆம்பள சட்டையை வயிற்றில் மடித்துக் கட்டியிருக்கிறார். செம செக்ஸியாக இருக்கும் இந்தப் போட்டோவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். இதற்கு கேப்ஷனாக, கேர்ள் ஃபிரம் இண்டியா என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர்.

நம்பவே முடியலை

நம்பவே முடியலை

ஒருவர் இன்ஸ்டாவின் ஹாட் பொம்மை நீங்கதான் என்று கூறியிருக்கிறார் ஒரு நெட்டிசன். கலர் காம்பினேஷன் சூப்பர் என்று சிலர் பாராட்டியுள்ளனர். ஒருவர் கேர்ள் ஃபிரம் தமிழ்நாடுன்னு போடுங்க என்று கூறியுள்ளார். தமிழ்ப் பெண்ணா, வெஸ்டர்ன் லுக்ல இருக்காங்க.. நம்பவே முடியலை என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார். இன்னொருவர் முடியலை என்று கூறியிருக்கிறார் அவர் ஸ்டில்லை பார்த்து.

இருட்டு அறையில்

இருட்டு அறையில்

இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானார். கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது. வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இதில், முக்கியமான பேய் கேரக்டரில் நடித்திருந்தார், நடிகை சந்திரிகா ரவி. அடுத்து நகுல் நடித்த செய் என்ற படத்தில் நான்சி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

Recommended Video

Vijay & MaheshBabu in Ponniyin Selvan? | Maniratnam, Suhasini
மாடர்ன் சில்க்

மாடர்ன் சில்க்

இப்போது, உன் காதல் இருந்தால் என்ற படத்தில் ஶ்ரீகாந்த் ஜோடியாக நடித்து வருகிறார். ஹாசிம் மரைக்காயர் இயக்கும் இந்தப் படத்தின் மலையாள நடிகர் மக்பூல் சல்மான் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. நடிகை சந்திரிகா ரவி, அசப்பில் கிளாமர் குயின் சில்க் ஸ்மிதாவை ஞாபகப்படுத்துவது போல இருப்பதால், தமிழ் ரசிகர்கள் மாடர்ன் சில்க் என்கின்றனர் இவரை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X