twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன சிம்ரன், டிரெஸ் எங்க..? வேற லெவல் கிளாமரில் மாடர்ன் சில்க்.. மயங்கி கிறங்கும் பேன்ஸ்!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல மாடர்ன் சில்க் நடிகை வெளியிட்டுள்ள வெற லெவல் கிளாமர் ஸ்டில் வைரலாகி வருகிறது.

    Recommended Video

    Kushee Ravi Photshoot Making Video • Dia Fame Kushee

    ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி நடிகை, சந்திரிக்கா ரவி. பிரபல மாடல்.

    இப்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

    லாக்டவுன் லீலைகள்.. கரீனா கபூர் மட்டும் இல்லைங்க.. இத்தனை பிரபலங்கள் கர்ப்பமாக ஆகியிருக்காங்களாம்!லாக்டவுன் லீலைகள்.. கரீனா கபூர் மட்டும் இல்லைங்க.. இத்தனை பிரபலங்கள் கர்ப்பமாக ஆகியிருக்காங்களாம்!

    சந்திரிகா ரவி

    சந்திரிகா ரவி

    இவர் அப்பா மலையாளம், அம்மா தமிழ். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படிப்பை முடித்த சந்திரிகா, நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு கற்றவர். அமெரிக்காவில் மாடலிங் கேரியரை தொடங்கிய அவர், பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தார். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் இது.

    ஷூட்டிங் முடியவில்லை

    ஷூட்டிங் முடியவில்லை

    சந்திரிகா ரவியுடன் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தனர். முக்கியமான பேய் கேரக்டரில் நடித்திருந்தார் சந்திரிகா. அடுத்து நகுல் நடித்த செய் என்ற படத்தில் நான்சி என்ற கேரக்டரில் நடித்தார். இந்தப் படம் கவனிக்கப்படவில்லை. பிறகு உன் காதல் இருந்தால் என்ற படத்தில் ஶ்ரீகாந்த் ஜோடியாக நடித்து வந்தார். இதன் ஷூட்டிங் முடியவில்லை.

    மாடர்ன் சில்க்

    மாடர்ன் சில்க்

    பிறகு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் அமெரிக்கா சென்றுவிட்ட சந்திரிகா, மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர், சில்க் ஸ்மிதாவை ஞாபகப்படுத்துவது போல இருப்பதால், தமிழ் ரசிகர்கள் மாடர்ன் சில்க் என்கின்றனர் இவரை. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் சந்திரிகா, தினமும் தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை அள்ளிவிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டு வருகிறார்.

    வேற லெவல் ஹாட்

    வேற லெவல் ஹாட்

    அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது வேற லெவல் ஹாட் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், இப்போதும் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்காகவே கிறங்கிக் கிடக்கிறார்கள், சில ரசிகர்கள். இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, நீங்கள் என்னை கவனிப்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    எங்க உங்க டிரெஸ்?

    எங்க உங்க டிரெஸ்?

    போட்டோவை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே லைக்ஸ்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் ரசிகர்கள். கமென்ட்களும் பஞ்சமில்லாமல் வந்திருக்கிறது பறந்து. ஒரு ரசிகர், என்ன சிம்ரன் எங்க உங்க டிரெஸ்? என்று கேட்டிருக்கிறார் அப்பாவியாக. இன்னொருவர், சில்க் ஸ்மிதாவுக்கு சரியான மாற்று இவர்தான்பா? என்று கூறியிருக்கிறார்.

    சாக்லேட் குயின்

    சாக்லேட் குயின்

    ஒரு நெட்டிசன், கண்களைத் திரும்ப முடியவில்லை என்றும் சாக்லேட் குயின் என்று மற்றொருவரும் வர்ணித்துள்ளனர். பலர் செம ஹாட், கார்ஜியஸ், உங்கள் கண்கள் இருக்கே என்று ஆரம்பித்து பலர் என்று கண்டபடி புகழ்ந்துள்ளனர். இன்னொருவர் உங்களை பார்க்கத் தொடங்கிவிட்டால் என் கண்களை திருப்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தப் போட்டோஸ் சோசியல் மீடியாவில் கன்னாபின்னா வைரலாகி வருகிறது.

    English summary
    chandrika ravi's latest insta stills sets fire in internet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X