சேரன், அமீர் பேட்டியை லைவாகப் பார்த்து அதிர்ந்த சந்துரு குடும்பம்!
இயக்குநர் சேரன மற்றும் அமீர் போன்றவர்கள் பிரஸ் மீட் வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை டிவியில் லைவாகப் பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர்.
தனது மகள் தாமினி - சந்துரு காதல் விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் தனது மனைவியுடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்.
சேரன் பேசும்போது ''சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்'' என்றார்.

ஆனால் அமீர் கூறும் போது, "அந்தப் பையன் தவறானவன்.. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு.. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்..." என்றார்.
இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர்.
இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ''எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் கூறியவை அபாண்டமான பழி, எங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது,'' என்றார்.
சந்துரு கூறும்போது, "தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா.. என்னை சினிமாவிலிருந்து விரட்ட அவர்கள் அப்படி பேசுகிறார்கள்," என்றார்.


Click it and Unblock the Notifications