கல்யாணத்துக்கு யாருக்கும் அழைப்பில்லையாமே.. இடம் மாற்றம்.. காஜல் அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!

By

சென்னை: நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் தனது திருமணத்தை நடிகை காஜல் அகர்வால் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.

இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

த்ரிஷா விலகிய படம்

த்ரிஷா விலகிய படம்

இந்தியில், மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படத்திலும் காஜல் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இருந்து த்ரிஷா விலகியதை அடுத்து, அந்த படத்திலும் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விரைவில் முடிக்க

விரைவில் முடிக்க

காஜலின் தங்கை திருமணமாகி செட்டிலாகி விட்ட நிலையில் காஜலும் திருமணம் செய்துகொள்வார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர், படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவருக்கு 35 வயது ஆகிறது. திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

மகிழ்ச்சி அறிவிப்பு

மகிழ்ச்சி அறிவிப்பு

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு, தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவுடன் திருமணம் முடிவாகி விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியானது. இதை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அதில் கவுதம் கிட்சிலுவுடன் தனது திருமணம் வரும் 30 ஆம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது என்று கூறியிருந்தார்.

வீட்டில் எளிமையாக

வீட்டில் எளிமையாக

அங்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், எளிமையாக நடத்த காஜல் முடிவு செய்துள்ளார். இதனால், மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள தனது வீட்டில் சிம்பிளாக திருமணம் நடக்க இருக்கிறது.

அழைப்பு இல்லை

அழைப்பு இல்லை

இதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். சினிமா துறையினர்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இது கடினமான காலகட்டம் என்பதால் இப்படியொரு முடிவை காஜல் எடுத்திருப்பதாக காஜல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X