கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல்.. பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு மாற்றப்படும் விக்ரம் பட ஷூட்டிங்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் விக்ரம். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜய் சேதுபதி வில்லன்

விஜய் சேதுபதி வில்லன்

கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். கமலின் உடல் நலக்குறைவு காரணமாக விக்ரம் படப்பிடிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சியில் ஷூட்டிங்

பொள்ளாச்சியில் ஷூட்டிங்

இந்நிலையில் விஜய் சேதுபதியும் கமலும் மோதும் சண்டைக் காட்சியை பொள்ளாச்சியில் படமாக்க பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பணிகள் முடிந்த நிலையில் தற்போது அதனை சென்னைக்கு மாற்றுகின்றனர். கமலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்றத்தை செய்கின்றனர்.

பின்னி மில்லுக்கு மாற்றம்

பின்னி மில்லுக்கு மாற்றம்

அந்த சண்டைக் காட்சியை உள் அரங்கில் படமாக்க முடிவு செய்துள்ள படக்குழு, இதற்காக பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற டேமேஜ்ஜான 50க்கும் மேற்பட்ட கார்கள் சென்னையில் உள்ள பின்னி மில்லுக்கு கொண்டு வரப்படுகின்றன. நடிகர் கமல் ஹாசன் உடல் நிலையில் முற்றிலும் குணமடைந்த பிறகு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

ரிலீஸ் ஆவதில் தாமதம்

ரிலீஸ் ஆவதில் தாமதம்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது கமல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பும் தாமதமாகியுள்ளது. இதனால் படம் ரிலீஸ் ஆவதிலும் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X