டெண்டுகொட்டாய் தயாரிக்கும் குழந்தைகள் படம் 'சாப்ளின் சாமந்தி'!

By Shankar

அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் டெண்டுக்கொட்டாய் எனும் டூரிங் திரையரங்குள் வழக்கில் இருந்தன. ஒவ்வொரு பத்துகிலோ மீட்டர் சுற்றளவுக்கும் ஒரு 'கொட்டாய்' காலமது.

தொன்னூறுகளில் டெண்டுகொட்டாய்களை மூட ஆரம்பித்தார்கள். இன்று அப்படிப்பட்ட அரங்குகளைத் தேடினாலும் பார்க்க முடியவில்லை.

காணாமல் போன டூரிங் கொட்டாய்களின் நினைவாகவோ என்னமோ தங்களின் பட நிறுவனத்துக்கு டெண்டுகொட்டாய் என்றே பெயர் சூட்டியிருக்கிறார் தயாரிப்பாளர் ஆர் எம் கண்டன்.

இந்த நிறுவனத்தின் சார்பில் முதல் முதலாக தயாரிக்கப்படும் படம் குழந்தைகளுக்கானது. தலைப்பு சாப்ளின் சாமந்தி. இப்படத்தில் ஹ்ருத்திகா எனும் குழந்தை சாமந்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Chaplin Samanthi - A movie for Children

இந்தப் படத்தின் காதல் ஜோடிகளாக அறிமுக நாயகன் கிரிஷ். ஆர் நடிக்க, அவருக்கு ஜோடியாக தியானா நடித்திருக்கிறார்.

கிராமத்தில் வாழும் ஒரு குழந்தைக்கும் சார்லி சாப்ளினுக்குமான நட்புதான் படத்தின் பிரதான மையக்கரு. அதோடு காதல், நகைச்சுவை என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமாக இந்தப் படம் தயாராகிறது.

தினமும் பள்ளிக்கூடத்திற்கு நடந்துபோகும் ஒரு கிராமத்துக் குழந்தைக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்பது கனவு. அவள் படிக்கும் பள்ளியில் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவருக்கு சைக்கிள் பரிசு கொடுக்கப்போவதாக அறிவிக்கிறார்கள். சாமந்தி அந்தப் போட்டியில் கலந்துகொண்டு சைக்கிளைப் பரிசாகப் பெற ஆசைப்படுகிறாள். அதற்காக சாப்ளின் வேடம் ஏற்க நினைக்கும் அவள், சாப்ளின் அணிந்திருப்பதைப் போல் தொப்பி, ஷூ, உடைகளை சேகரிக்க முயற்சிக்கிறாள். சாமந்தி மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டாளா? அவள் கனவு நிறைவேறியதா? என்ற எளிய கதையை, விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறாராம் அறிமுக இயக்குனர் ஆர்.பிரகாஷ்.

அரியலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் மொத்த படப்பிடிப்பும் படமாக்கப்பட்டுள்ளது. மிர்ச்சி சிவா நடித்த ‘தமிழ் படம்' மூலம் அறிமுகமான கண்ணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உதவியாளர் வெங்கி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யு சான்றிதழ் வாங்கியுள்ள சாப்ளின் சாமந்தி திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X