பீஸ்ட் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா?
சென்னை : நடிகர் விஜய் இப்பொழுது நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.ஒவ்வொரு நாளுமிந்த படத்திற்கு ஹைப்பு ஏறி கொண்டே போகிறது .
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை பூஜா ஹெக்டே தமிழில் நடிப்பதால் இப்படத்தின் மீது பல மடங்கு எதிர்பார்ப்பு உள்ளது என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பீஸ்ட் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்க இப்போது விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த முக்கிய தகவல்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது.

ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதை களத்தில்
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என இரண்டு பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலிப்குமர் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . முற்றிலும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. அதை தொடர்ந்து டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால்
முகமூடி படத்தில் நடித்து அறிமுகமான பூஜா ஹெக்டே அதை தொடர்ந்து தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது முன்னணி கதாநாயகியாக உள்ள பூஜா ஹெக்டே மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு உள்ளது

செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் ...
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஓப்பனிங் பாடலை சிவகார்த்திகேயன் எழுதுகிறார் என்ற தகவலும் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தனது ஒவ்வொரு படங்களிலும் கடத்தலை மையமாக கொண்ட கதைகளை இயக்கிவரும் நெல்சன் இந்தப் படத்திலும் அதே போன்ற சுவாரசியமான கதையை வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது

விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர்
மேலும் இந்த படத்தில் விஜய் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு தகவல்கள் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து வெளியாகிக் கொண்டே இருக்க இப்பொழுது விஜய் மற்றும் பூஜாவின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் ஏஜென்ட் சாய் எனவும் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரத்தின் பெயர் ஸ்ரீரூபா எனவும் வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஏஜென்ட் சாய் மற்றும் ஸ்ரீரூபா என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது பொறுத்து இருந்து பார்ப்போம் . ரசிகர்கள் நிறைய பெயர்களை ஒவ்வொரு நாளும் சொல்லி வரும் நிலையில் இந்த இரண்டு பெயர்கள் தான் கதாபாத்திரத்தின் பெயர் என்று பலரும் சினிமா வட்டாரங்களில் சொல்லி வருகின்றனர் .


Click it and Unblock the Notifications











