‘ஜவான்’ சம்பவம் பெருசா இருக்கும் போல… கூலிங் கிளாசுடன் கெத்துக்காட்டும் விஜய்சேதுபதி!

சென்னை: அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அனிரூத் ரவிச்சந்தர் இசையில் உருவாகி வரும் ஜவான் படத்தில், ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய்சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 7ந் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

character poster of Vijay Sethupathi from Jawan trending on internet

இயக்குநர் அட்லீ: பிகில் படத்திற்கு பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இப்படம் உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ள இப்படத்தின் டீரைலர் கடந்த வாரம் வெளியாகி படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்தது.

ஜவான்: படம் செப்டம்பர் 7ந் தேதி வெளியாக உள்ளதால், படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகைகையில் நயன்தாராவின் லுக் கடந்த வாரம் வெளியானது. அதில், நயன்தாரா கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக இருந்தார். மேலும் அந்த போஸ்டரில், புயலுக்கு முன் வரும் இடி அவள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜவான் படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது போஸ்டரை பார்க்கும் போதே தெளிவாக தெரிந்தது.

character poster of Vijay Sethupathi from Jawan trending on internet

the dealer of death: இந்நிலையில், ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய்சேதுபதியின் கதாபாத்திர போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு சுமார் ஸ்டைலாக இருக்கிறார். இந்த இந்த போஸ்டரில் 'the dealer of death' என்று கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரைப் பார்த்த பேன்ஸ் ஜவான் படம் பெரிய சம்பவம் பண்ணும் போல என்று இத்திரைப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அடுத்தடுத்து வில்லன்: வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய்சேதுபதி, மாஸ்டர் படத்தில் அசத்தலான வில்லனாக வந்து அதிர வைத்தார். அதன்பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல், பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்த விக்ரம் படத்தில் சந்தானம் என்ற வில்லன் ரோலில் பட்டையை கிளப்பி இருந்தார். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X