»   »  சரண்ராஜ் மனைவிக்கு பிடிவாரண்ட்

சரண்ராஜ் மனைவிக்கு பிடிவாரண்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரண்ராஜின் மனைவிக்கு சென்னை ஆலந்தூர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

நடிகர் சரண்ராஜ் கடந்த 2002ம் ஆண்டு அண்ணன் தங்கை என்ற படத்தைஇயக்கினார். அவரது மனைவி கல்பனாதான் இப்படத்தின் தயாரிப்பாளர்.

இப்படத்திற்காக நடிகர் விஷாலின் தந்தையும், பைனான்சியருமானஜி.கே.ரெட்டியிடம் ரூ. 18 லட்சம் பணத்தை கல்பனா கடன் வாங்கியிருந்தார்.

இதில் ரூ. 8 லட்சம் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக காசோலையைக்கொடுத்தார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலைதிரும்பி விட்டது.

இதையடுத்து ரெட்டி சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு நீதிபதி உமா மகேஸ்வரி 3 முறை சம்மன்அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூறி இன்றுநீதிபதி உமா மகேஸ்வரி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil