twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!

    |

    திருவனந்தபுரம்: யானை தந்தம் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் நடிகர் மோகன் லால் மீது 7 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் கடந்த 2012ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 4 யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.

    இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதைய வனத்துறை அமைச்சரின் தலையீட்டால் மோகன் லால் மீதான வழக்கு கைவிடப்பட்டது.

    Charge Sheet filed against Malaya actor Mohanlal

    இந்நிலையில் இதுதொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வன உயிர் பாதுகாப்புச் சட்டப்பிரிவின்படி தந்தங்களை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனைதொடர்ந்து மோகன் லாலுக்கு எதிரான வழக்கை மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பெரும்பாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Charge Sheet filed against Malaya actor Mohanlal about illegal possession of ivory.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X