சார்லி சாப்ளின் 2.. முதல் பாகத்துக்கும், 2ம் பாகத்துக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
சார்லி சாப்ளின் 2 ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் நடிகை நிக்கி கல்ரானி.
Recommended Video

சென்னை: சார்லி சாப்ளின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் பெயரைத் தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகை நிக்கி கல்ரானி.
'சார்லி சாப்ளின்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் பிரபுதேவா-நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர். பிரபு, அதா சர்மா, அரவிந்த் ஆகாஷ் உள்பட மேலும் பலரும் நடித்துள்ளனர். ஷக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார்.
இப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. முதல் பாகத்தில் நடந்த கதைகளின் தொடர்ச்சியாக இப்படம் இருக்குமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது. அதில் நடித்த நாயகர்களே இதிலும் நடித்துள்ளதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

நம்பிக்கை:
ஆனால், முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாக கதைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் நடிகை நிக்கி கல்ரானி. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

நெருக்கமான படம்:
மேலும், ‘சார்லி சாப்ளின்-2,' என் மனதுக்கு நெருக்கமான படம். ஜாலியாக-குடும்பமாக வேலை செய்தோம். பிரபு பாசமாக பார்த்துக்கொண்டார். சுதந்திரமாக வேலை செய்தோம்.

ஜாலியான படம்:
இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரித்து விட்டுச் செல்லலாம். முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் உள்ள ஒற்றுமையே காமெடி படம் என்பது மட்டும் தான். மற்றபடி இது வேறு கதைக்களம்.

சின்ன மச்சான் பாடல்:
"சின்ன மச்சான்" பாடல் பிடித்து இருந்தது. அது இந்த அளவுக்கு ‘ஹிட்'டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு காரணம், அம்ரீஷ். படத்தில் நகைச்சுவை, காதல் எல்லாம் இருக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











