Charlie Chaplin Daughter: ஷாக்கிங்.. சார்லி சாப்ளின் மகள் காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக மக்களை இன்றும் தனது இணையற்ற நகைச்சுவை படங்கள் மூலம் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சார்லி சாப்ளினின் மகள் ஜோசப்பைன் சாப்ளின் காலமானார். அவருக்கு வயது 74.

ஹிட்லர் போல சின்ன மீசையை வைத்துக் கொண்டு தலையில் தொப்பி போட்டுக் கொண்டு கையில் ஒரு தடியுடன் அப்பாவி முகத்துடன் எட்டிப் பார்க்கும் அந்த சார்லி சாப்ளின் உருவமே ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி விடும்.

Charlie Chaplin Daughter Josephine Chaplin passes away

மாடர்ன் டைம்ஸ், சிட்டி லைட்ஸ், தி கிட், தி கிரேட் டிக்டேட்டர் என பல படங்களில் நடித்து காமெடி மூலமாக புரட்சி கருத்துக்களையும் முன் வைக்க முடியும் என அப்போதே ஹீரோவாகவும் இயக்குநராகவும் பல படங்களை உருவாக்கி அசத்திய சார்லி சாப்ளினுக்கு மொத்தம் 8 குழந்தைகள் பிறந்தனர்.

சார்லி சாப்ளின் மகள் மறைவு: நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மொத்தம் 4 மனைவிகளை திருமணம் செய்துக் கொண்டார். அதில், அவர் முதன்முறையாக 1943ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டவர் ஊனா ஓ நெயில். சார்லி சாப்ளினுக்கும் ஊனாவுக்கும் மகளாக பிறந்த ஜோசப்பைன் சாப்ளின் தான் தற்போது காலமானார்.

74 வயதான ஜோசப்பைன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல் அளித்துள்ளனர். அவரது மறைவு செய்தி அறிந்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சார்லி சாப்ளின் படத்தில் அறிமுகம்: 1952ம் ஆண்டு சார்லி சாப்ளின் நடிப்பில் வெளியான லைம்லைட் படத்திலேயே அவரது மூன்றாவது மகளான ஜோசப்பைன் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர், ஜோசப்பைனும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தி ஃபோர் சாரியாட்ஸ், தி கேண்டபரி டேல்ஸ், தி பே பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜோசப்பைன் டிவி தொடர்களிலும் அதிகம் நடித்துள்ளார்.

3 மகன்கள்: 1969ம் ஆண்டு நிக்கோலஸ் சிஸ்டோவாரிஸ் என்பவரை திருமணம் செய்த சார்லி சாப்ளினின் மகள் ஜோசப்பைன் 1977ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர், ஜீன் க்ளாடி என்பவரை 1989ம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவருடன் இணைந்து 3 மகன்களை பெற்றுக் கொண்டார். ஆனால், 2013ம் ஆண்டு அவரது இரண்டாவது கணவர் காலமானார். அதன் பின்னர் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஜோசப்பைன் கடந்த ஜூலை 13ம் தேதியே காலமானதாகவும், தற்போது தான் அதிகாரப்பூர்வமாக மீடியாக்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சார்லி சாப்ளினின் மகள் மற்றும் அமெரிக்க நடிகையான ஜோசப்பைன் மறைவு செய்தி அறிந்ததும் ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X