நடிகர் சார்லி மகன் திருமணம் - சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Recommended Video

நடிகர் சார்லி மகன் திருமணம் - சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து-வீடியோ | actor Charlies son Adithya Wedding

சென்னை: நடிகர் சார்லியின் மகன் ஆதித்யாவின் திருமணம் கலந்துகொண்ட திரையுலக பிரமுகர்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காமெடியனாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக பட்டையை கிளப்பும் நடிகர் தான் சார்லி. அதனை முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. நான்கு தலைமுறை நடிகர்களுடனும் சினிமாவில் கோடி கட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.

Charlie Son’s wedding function, Celebrities attend and greets

கடந்த 1983ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகர் சார்லி இன்று வரை நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறார். நாகேஷ் எப்படி பாலச்சந்தருக்கு ஃபேவரைட் நடிகரோ அதே மாதிரி நடிகர் சார்லியும் தான்.

பாலச்சந்தர் இயக்கிய பெரும்பாலான படங்களில் நடிகர் சார்லி நிச்சயம் இடம் பெறுவதுண்டு. மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்திருந்தாலும், பாலச்சந்தர் படத்தில் இவருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் வகையிலேயே கதை நகரும். குறிப்பாக உன்னால் முடியும் தம்பி, மனதில் உறுதி வேண்டும், வானமே எல்லை, டூயட். புதுப்புது அர்த்தங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 800க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் சார்லி. தன்னுடைய தனித்தன்மையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர்.

குறிப்பாக விஜய், அஜித், கமல், ரஜினி, என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவரை அதிக அளவு பார்க்க முடியும். இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் ஆரம்பமான சினிமா பயணம், இன்று வரை தொடர்ந்து வருகிறது.

பல இயக்குனர்கள் இவருக்கு பல விதமான கேரக்டர்களை கொடுத்து கௌரவ படுத்தி நடிப்புக்கு தீனி போட்டுள்ளனர். மேலும் கடந்த சில வருடங்களாக, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய மகன் ஆதித்யாவிற்கும், அமிர்தா என்கிற பெண்ணுக்கும் நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்த இளைய திலகம் பிரபு, நாசர், நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், ராதாரவி, செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சார்லியின் ரசிகர்களும் அவருடைய மகனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சார்லி போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை மட்டும் அல்ல, கவுரவமும் கூட. அவரது குடும்ப விழாவில் சினிமா நட்சத்திரங்கள் மகிழ்ச்சியுடன் பங்கு பெற்று வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X