நயனுக்கு முன்பு த்ரிஷாவுக்கு கல்யாணம் ஆகிடுமோ?: ஆள் ரெடி
சென்னை: நடிகை சார்மி புரபோஸ் பண்ண த்ரிஷா ஒப்புக் கொண்டுள்ளார்.
த்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. தன் மனதிற்கு பிடித்த நபரை இன்னும் பார்க்கவில்லை என்கிறார் அவர். 96 பட வெற்றியை அடுத்து த்ரிஷாவின் மார்க்கெட் சூப்பராக பிக்கப் ஆகியுள்ளது.
இந்நிலையில் த்ரிஷா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
சார்மி
பேபி, நான் என்றுமே உன்னை காதலிக்கிறேன். என் ப்ரொபோசலை நீ ஏற்பாய் என்று காத்திருக்கிறேன். நாம் திருமணம் செய்து கொள்வோம்( அது சட்டப்படி செல்லும்). பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகை சார்மி ட்வீட் செய்தார்.
த்ரிஷா
சார்மியின் ட்வீட்டை பார்த்த த்ரிஷாவோ நான் தான் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துவிட்டேனே என்று பதில் அளித்தார்.
ரசிகர்கள்
சார்மி, த்ரிஷாவின் ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்கள் சிலர் நல்லது, சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ, வேண்டாம் இந்த விபரீத முடிவு என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

நடிப்பு
த்ரிஷாவுக்கு திருமணம் ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க விருப்பம். அதற்கு யார் சம்மதம் தெரிவிக்கிறாரோ அவரை தான் திருமணம் செய்வார் என்று கூறப்படுகிறது. முன்னதாக அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து அத்துடன் நின்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











