'ஐ'-க்கு அடுத்து '10 எண்றதுக்குள்ள':.. விக்ரம் ரசிகர்கள் டபுள் ஹேப்பி!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும், ஐ படத்தைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 10 எண்றதுக்குள்ள படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். அடுத்தடுத்து இரண்டு விக்ரம் படங்கள் ரிலீசாகும் என்ற தகவலால் விக்ரம் ரசிகர்கள் இரட்டை சந்தோசத்தில் உள்ளனர்.
ஐ படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், இன்னும் அப்படத்தின் இந்தி, தெலுங்குப் பட வேலைகள் முடிவடையாத நிலையில் ரிலீஸ் தேதி குறித்து தெளிவான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், 'ஐ' படத்தைத் தொடர்ந்து '10 எண்றதுக்குள்ள' படத்தையும் விளம்பரப்படுத்த அப்படத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்ரம் ஜோடியா சமந்தா...
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ளப் படம் 10 எண்றதுக்குள்ள. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

ஐ படத்திற்குப் பிறகு...
'ஐ' பட புகைப்படங்கள், பேட்டிகள் என்று தற்போது ஊடகங்களில் பரபரப்புத் தகவல்கள் வெளி வ்ந்து கொண்டிருப்பதால், அப்படத்தின் ரிலீசிற்குப் பிறகு '10 எண்றதுக்குள்ள' விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு...
இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 20ந்தேதி துவங்க உள்ளது. முக்கியக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப் பட்டுவிட்ட நிலையில், ஒரு சண்டைக் காட்சியும், பாடல்களும் மட்டும் பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடப் பட்டுள்ளதாம்.

சார்மி...
இதற்கிடையே இப்படத்தில் புதிதாக நடிகை சார்மியும் இணைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் ஹேப்பி...
எது எப்படியே ஐ, அதனைத் தொடர்ந்து 10 எண்றதுக்குள்ள என அடுத்தடுத்து விக்ரம் படங்கள் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் ஏகத்துக்கும் சந்தோசத்தில் உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











