»   »  சார்மிக்கு ஆக்சிடன்ட்டா?

சார்மிக்கு ஆக்சிடன்ட்டா?

Subscribe to Oneindia Tamil

நடிகை சார்மி விபத்தில் சிக்கியதாக கிளம்பிய வதந்தியால் ஆந்திராவில் பரபரப்புஏற்பட்டது.

விஜய டி.ராஜேந்தரின் இயக்கத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சார்மி. அதற்குப்பிறகு காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு என சில படங்களில் தலை காட்டியசார்மி, அப்படியே தெலுங்குக்குத் தாவி கவர்ச்சி கோதாவில் குதித்தார்.

சார்மியின் சார்மிங் கிளாமருக்கு கிறங்கிப் போய்க் கிடக்கிறார்கள் தெலுங்குரசிகர்கள். படு பிசியாக நடித்து வரும் சார்மி, 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்குகாரில் வரும்போது, விபத்தில் சிக்கி சீரியஸான நிலையில் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருப்பதாக ஆந்திராவில் செய்தி வெளியானது.

இதனால் ஹைதராபாத்திலும், சென்னையிலும் டென்ஷன் பரவியது. சார்மியின்மேனேஜருக்கு போன் மேல் போன் போட்டு விசாரிக்கத் தொடங்கினராம் ஆந்திரபுள்ளிகள்.

ஆனால் சார்மி விபத்தில் சிக்கியதாக வந்த செய்தி ஒரு வதந்தி என்று அவர்விளக்கியுள்ளார்.

சார்மி ஹைதராபாத்தில்தான் இருக்கிறார். அவர் சென்னைக்கு வரவே இல்லை என்றுகூறிய மேனேஜர், யார் இந்த வதந்தியைக் கிளப்பி விட்டதுன்னே தெரியலையே,தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க சாமி என்று புலம்புகிறார் மேனேஜர்.

சுத்திப் போடுங்கப்பா, சார்மிக்கு கண்ணு பட்டுடுச்சு!

Read more about: charmi met with accident
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil