அந்த தப்பை செய்யவேமாட்டேன்.. பிரபல நடிகையை சுற்றிய திருமண வதந்தி.. ஆனால் இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: நடிகர் சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சார்மி.

தெலுங்கு நடிகையான இவர், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

33 வயதாகும் நடிகை சார்மியை சுற்றி மீண்டும் திருமண வதந்தி வலம் வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரே போடாக போட்டுள்ளார் சார்மி.

காதல் அழிவதில்லை

காதல் அழிவதில்லை

ஆந்திராவை சேர்ந்த நடிகை சார்மி, கடந்த 2002ம் ஆண்டு தெலுங்கில் வெளியான நீ தோடு காவாலி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதே ஆண்டு வெளியான நடிகர் சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சார்மி.

தமிழில்

தமிழில்

டோலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சார்மி, தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்துள்ளார். காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு, லாடம் மற்றும் பத்து எண்றதுக்குள்ள உள்ளிட்ட தமிழ்ப்படங்கள் நடிகை சார்மி நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் அவதாரம்

தயாரிப்பாளர் அவதாரம்

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என நடிகையாக கலக்கி வந்த சார்மி கடந்த 2015ம் ஆண்டு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தயாரிப்பாளர் ஆகி விட்டார். தெலுங்கில் வெளியான ஜோதி லக்‌ஷ்மி படத்தை முதன் முதலாக தயாரித்து அவரே லீடு ரோலில் நடித்தார். மேலும், ரோக், பைசா வசூல், மெஹ்பூபா, ஐ ஸ்மார்ட் ஷங்கர், ரொமாண்டிக் மற்றும் விரைவில் வெளியாக உள்ள விஜய் தேவரகொண்டாவின் லைகர் உள்ளிட்ட படங்களையும் சார்மி இணைந்து தயாரித்துள்ளார்.

இன்னும் சிங்கிள் தான்

இன்னும் சிங்கிள் தான்

15 வயதிலேயே சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நடிக்க வந்த நடிகை சார்மிக்கு தற்போது 33 வயதாகிறது. இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார் நடிகை சார்மி. அவ்வப்போது அவருக்கு திருமணம் ஆகப் போகுது என வதந்திகள் பரவுவது வழக்கம். தற்போதும் வைரலாக திருமண வதந்தி பரவ அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சார்மி.

எனக்கு திருமணமா

எனக்கு திருமணமா

இந்த மாதம் நடிகை சார்மி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் வைரலான வதந்தியை அறிந்த நடிகை சார்மி, அது முற்றிலும் வதந்தி என்றும், போலியான செய்திகளை எழுதுபவர்களின் கற்பனை திறமையை எண்ணி ஆச்சர்யப்படுகிறேன் என விளாசி உள்ளார்.

அந்த தப்பை செய்யமாட்டேன்

அந்த தப்பை செய்யமாட்டேன்

மேலும், தனது வாழ்வில் தற்போது செம சந்தோஷமாக உள்ளேன் என்றும், மறந்தும் கூட திருமணம் செய்து கொள்ளும் தப்பை ஒரு போதும் செய்யவே மாட்டேன் என்றும் நடிகை சார்மி பதிவிட்டு இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. முன்னதாக அவர் அளித்த சில பேட்டிகளில் திருமண சடங்கில் தனக்கு விருப்பமே இல்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டீசர் ரிலீஸ்

டீசர் ரிலீஸ்

விஜயதேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் லைகர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் துயரத்தில் வாடி வரும் நிலையில், எந்தவொரு செலிபிரேஷனும் வேண்டாம் என லைகர் டீசர் ரிலீஸை தள்ளிப் போடுவதாக அறிவித்துள்ளார் சார்மி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X