ஒரு கையில சரக்கு.. இன்னொரு கையில.. ச்சீ.. ச்சீ.. நடிகையின் செயலால் முகம் சுளிக்கும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகை ஒருவர் ஒரு கையில் சரக்குடனும் மற்றொரு கையால் ஆபாச சைகையும் காட்டியிருப்பது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
மும்பையை பூர்விகமாக கொண்டவர் நடிகை சார்மி. இவர் தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம், கன்னடா என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் சார்மி. தமிழில் சிம்புவுடன் நடித்த காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தெலுங்கு மொழி
தொடர்ந்து காதல் கிசு கிசு, ஆகா எத்தனை அழகு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி பாலிவுட் என கால் பதித்தாலும் அவரை முழுமையாக ஏற்றுக் கொண்டது தெலுங்கு சினிமாதான். அவர் நடித்துள்ள படங்களில் பெரும்பாலான படங்கள் தெலுங்கு மொழி படங்கள்தான் ஆகும்.

தமிழில் வாய்ப்பில்லை
தமிழில் கடைசியாக 10 என்றதுக்குள்ள என்ற படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார். அதன்பிறகு எந்த படத்திலும் பெரிதாக தலைக்காட்டவில்லை சார்மி. இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சார்மி, தனது போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

நடு விரலைக் காட்டி
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வரும் சார்மி, கவர்ச்சியிலும் எல்லை மீறி வருகிறார். தெலுங்கில் பிரேமா ஒக்க மைக்கம் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார் சார்மி. இந்நிலையில் நடிகை சார்மி இரவு பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அதில் ஒரு கையில் மதுவுடனும் மறு கையில் நடுவிரலை காட்டி ஆபாச சைகையும் செய்திருக்கிறார் சார்மி.

முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்
சார்மியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன இவ்வளவு மோசமான சைகை செய்திருக்கிறீர்கள் என முகம் சுளித்து வருகின்றனர். நடிகை சார்மி, நடிகை இலியானா குறித்து தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











