பாரீஸில் சாருஹாசன் படுகாயம்
பிரான்ஸ் சென்றிருந்த நடிகர் சாருஹாசன் ஹோட்டல் படிக்கட்டில் தவறி விழுந்துபடுகாயமடைந்தார்.
கமல்ஹாசனின் அண்ணனும், நடிகை சுஹாசினியின் தந்தையுமான நடிகர் சாருஹாசன்பிரான்ஸ் சென்றுள்ளார்.
பாரீஸில் உள்ள ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். அங்கு ஹோட்டல் படிக்கட்டில்இறங்கி வந்தபோது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருடைய தலை, இடுப்பு, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாகஅவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இடுப்புப் பகுதியில் அவருக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
தகவல் அறிந்ததும் நடிகை சுஹாசினி உடனடியாக பாரீஸ் சென்றார்.
தசாவதாரம் படம் தொடர்பாக அமெரிக்கா சென்றுள்ள கமலுக்கும் தகவல் போனது.அவர் உடனடியாக பாரீஸ் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு பேசி சாருஹாசன்குறித்து விசாரித்தார்.
தற்போது சாருஹாசன் குணமடைந்து அபாய கட்டத்தைத் தாண்டியிருப்பதாகவும்,18ம் தேதி சென்னை திரும்பவுள்ளதாகவும் சுஹாசினி தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications