93 வயது.. தீபாவளி அதுவுமா திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாருஹாசன்

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரரும் பிரபல நடிகருமான சாருஹாசன் தீபாவளியன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்போவதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், சாருஹாசன் உடன் மருத்துவமனையில் அவரது மகள் சுஹாசினி மணிரத்னம் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1931ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி பரமக்குடியில் பிறந்தவர் தான் சாருஹாசன். 1986ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான தபரன கதே படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர்.

charuhasan kamal haasan hospital

93 வயதிலும் நல்லா ஆக்டிவாக இருந்து வந்த சாருஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் அண்ணன்: ஓய்வுப்பெற்ற வழக்கறிஞராகவும் இந்திய சினிமாவின் மூத்த நடிகருமான சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் இவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். 1940களிலேயே நாள் ஒன்றுக்கு 2 ஆங்கில படங்களை பார்க்கும் அளவுக்கு அப்போதே சினிமாவில் அளவுக்கடந்த காதல் கொண்ட சாருஹாசன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

சகலகலா வல்லவன்: கமல்ஹாசனை போலவே இவரும் சகலகலா வல்லவன் தான். வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் பல பரிமாணங்களை காட்டியுள்ளார். 1979ம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்தார். நெஞ்சத்தை கிள்ளாதே, மூன்று முகம், விக்ரம், தளபதி, வீரா, ஜெய்ஹிந்த், தில், தமிழன், உத்தமப்புத்திரன், சைத்தான், தாதா 87 மற்றும் இந்த ஆண்டு மோகன் நடிப்பில் வெளியான ஹரா உள்ளிட்ட பல படங்களில் 93 வயது வரை சினிமாவில் நடித்து வருகிறார். புதிய சங்கமம் மற்றும் ஐபிசி 215 உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார்.

அறுவை சிகிச்சை: பழம்பெரும் நடிகர் சாருஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் போவதாகவும் அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா என அவரிடமே அவரது செல்ல மகள் சுஹாசினி கேட்க, ரெடி என சாருஹாசன் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே பேசும் வீடியோவை சுஹாசினி வெளியிட்டுள்ளார்.

தீபாவளி இரவு: தீபாவளிக்கு முந்தைய இரவு திடீரென எங்களுக்கு மிகப்பெரிய சங்கடம் ஏற்பட்டது. அப்பா சாருஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தோம். தீபாவளி முழுக்க இங்கேதான் கழிந்தது. ஆனால், அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்தால் அவர் குணமாகி விடுவார் என மருத்துவர்கள் கூறுகின்றனர் என சுஹாசினி பதிவிட்டுள்ளார்.

குஷ்பு போட்ட கமெண்ட்: எனக்கு தெரிந்தவரை ரொம்பவே ஸ்ட்ராங்கான மனுஷன் யாரென்றால் சாருஹாசன் தான். நிச்சயம் அவர் குணமாகி வீடு திரும்புவார். அவருக்கு எதுவுமே ஆகாது என நடிகை குஷ்பு கமெண்ட் போட்டுள்ளார். ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் சாருஹாசன் உடல்நலம் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X