திருமணத்தின் மீது நம்பிக்கையில்லா சாருஹாசன், கமல், ராம் கோபால் வர்மா

By Siva

சென்னை: பிரபல நடிகர்கள் சாருஹாசன், கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆகியோருக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே கிடையாது.

நவீன உலகில் திருமணம் என்னும் புனித பந்தம் கேலிக்கூத்தாகி வருகிறது. திருமணத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து கணவன், மனைவி உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து கொண்டே போகிறது. தற்போது திருமணம் ஆகாமலேயே ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பிரபலமாகி விட்டது.

முன்பெல்லாம் வெளிநாடுகளில் பிரபலமாக இருந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப் தற்போது இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் கமல் ஹாசன் அவரது சகோதரர் சாருஹாசன் மற்றும் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆகியோருக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

குடும்பஸ்தர் சாருஹாசன்

குடும்பஸ்தர் சாருஹாசன்

பழம்பெரும் நடிகரும், உலக நாயகனின் சகோதரருமான சாரு ஹாசனுக்கு திருமணமாகி 3 மகள்கள், பேரக் குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவருக்கோ திருமணத்தின் மீது நம்பிக்கையே கிடையாது. நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவர் இத்தனை ஆண்டுகளாக குடும்பஸ்தனாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறை மணந்த கமல்

இரண்டு முறை மணந்த கமல்

கமல் ஹாசனுக்கும் தன் அண்ணனைப் போன்று திருமணத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால் அவர் இரண்டு முறை மணமானவர். முதல் மனைவியைப் பிரிந்த கமல் தற்போது இரண்டாவது மனைவியையும் பிரிந்து வாழ்கிறார். தனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் திருமணம் செய்த அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று அவர் அண்மையில் தெரிவி்ததிருந்தார்.

சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா

சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா

திருமணத்திற்கு எதிரானவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஆனால் அவருக்கும் திருமணமாகி ரேவதி என்ற மகள் உள்ளார். கடந்த 2ம் தேதி தான் ரேவதிக்கும் அவரது காதலனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பொறுப்புள்ள தந்தையாக நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்த அவர் அதை யாருக்கும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்த விசேஷத்திற்கு ஒரு சிலரைத் தவிர யாரையுமே அழைக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X