நடிகைகளின் அந்தரங்கத்தை பற்றி பேசுவதே வேலை.. அந்த மூன்று பேரை வளர்த்ததே விஜய் தான்.. சேகுவேரா பளீச்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, அண்மையில் அளித்த பேட்டியில், ஒரு மூன்று பேர் குழு இருக்கிறார்கள். அவர்கள் 50 வீடியோக்களில் 45 வீடியோக்கள் என்னை பற்றி தான் பேசி சம்பாதிக்கிறார்கள். நான் அவர்களை மூன்று வகையான குரங்காக தான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய பத்திரிகையாளர் சேகுவேரா இவர்களை வளர்த்துவிட்டதே விஜய் தான் என்று குற்றம் சாட்டினார்.
நடிகை நயன்தாரா குற்றச்சாட்டிய அந்த மூன்று பேர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நயன்தாரா மட்டுமில்லை அவர்களின் வீடியோவை கூர்ந்து கவனித்தால் பல நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்கள் குறித்து பேசியும் பேசாதது போலவும் பூசி மொழுகி பேசுவார்கள். இவர்கள் யோகி பாபுவின் லோக்கல் சரக்கு என்ற படத்தை விமர்சித்து பேசி இருந்தனர். அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.

சேகுவேரா பேட்டி: இது குறித்து பேசிய யோகி பாபு, நான் அவர்களிடம் ஏன் இப்படி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர்கள், எங்களை கவனித்தால் பேச மாட்டோம் என்று கூறியதாக வெளிப்படையாகவே யோகி பாபு கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து அந்த மூன்று பேரும் கொந்தளித்து, யோகி பாபு குறித்து மோசமான வார்த்தைகளை முன்வைத்து கடுமையாக விமர்சனம் செய்தனர். அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து பேசி இருந்தார்கள். அதன் பிறகு அவர்கள் யோகி பாபு பற்றி பேசுவதுதே இல்லை. யோகி பாபுவிற்கு நடிக்க தெரியாது, காமெடி செய்ய தெரியாது என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இவர்கள் மூன்று பேரை பார்த்தாலே சிரிப்பு வருகிறதே, இவர்களைத்தான் பிரபலமான நடிகை நயன்தாரா, ஆங்கில பத்திரிக்கையில் குரங்கு என்று சொல்லி இருக்கிறார். இதைத் கேட்டால் குரங்குகள்தான் அவமானப்படும்.
ஆதாரம் இருக்கா: நடிகைகள் தானே இவர்களை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு வாய்க்கு வந்ததை ஆதாரமே இல்லாமல் பேசி வருகிறார்கள். ஆனால், இப்போது இவர்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பமாக இருக்கிறது. அதனால் மாட்டிக்கொண்டு நிற்கிறார்கள். லியோ படம் வெளியான போது விஜய் அவர்களை, தரக்குறைவாக விமர்சனம் செய்து வந்த பிஸ்மி, இப்போது விஜய்யை உயர்த்தி பேசி வருகிறார். அதற்கு என்ன காரணம்? இவர்கள் மூன்று பேரையும் வளர்த்து விட்டதே விஜய் தான். அவர்களுக்கு கோல்ட் காயின்களை கொடுத்து, தன்னைப்பற்றி ப்ரொமோட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இப்போதும், அதே வேலையை தான் விஜய் செய்து கொண்டிருக்கிறார்.
விஜய் செய்த தவறு: விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகுதான் இவர்கள் மூன்று பேரும் அரசியல் குறித்து பேச தொடங்கினார்கள். அதற்கு முன்பு வரை இவர்கள் முழுக்க முழுக்க சினிமா குறித்து மட்டுமே பேசி வந்தார்கள். ஆனால், இப்போது, சீமானை விமர்சித்து பேசுகிறார்கள், திமுகவை தாக்கி பேசுகிறார்கள். எந்தவிதமான ஆதாயமும் இல்லாமல் அவர்கள் மூன்று பேரும் யாரையும் உயர்த்தி பேச மாட்டார்கள். அது முழுக்க முழுக்க விஜய் செய்த தவறு என்று பத்திரிக்கையாளர் சே குவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











