தாலி கயிறு ஆபாசப்படுகிறது.. கீர்த்தி சுரேஷ் நடத்தும் நாடகம்..சேகுவேரா என்ன இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் பட ப்ரோமோஷனில் படுகவர்ச்சியான உடை அணிந்து வந்திருந்தார். திருமணமான சில நாட்களிலேயே ஹனிமூனுக்கு கூட போகாமல், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அதன் பிறகு புது தாலி கயிறுடன்

ஹீரோ வருண் தவானுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் டிரெண்டாகி பேசு பொருளானது. இதுகுறித்து சேகுவேரா பேட்டி அளித்துள்ளார்.

keerthy suresh baby john che guevara

கீர்த்தி சுரேஷ் திருமணமான சில நாட்களிலேயே, ஹனிமூன் கூட செல்லாமல் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் தான், அவர் தன்னுடைய வேலையை மிகவும் நேசிக்கிறார் என்பது இதன் மூலம் நன்றாக தெரிகிறது. ஆனால், அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் புது தாலி அணிந்து கொண்டு வந்து, நம்முடைய பாரம்பரியத்தை காப்பாற்றுகிறார் என்று சொன்னாலும், அந்த தாலிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அந்த தாலி கயிறை அணிந்து கொண்டு ஆபாசமாக கவர்ச்சி உடை அணிந்து வருவதை எந்த பெண்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தாலி ஆபாசப்படுகிறது: ஒரு படத்தில் நடிக்கும் போது தாலியை கழட்டி விடலாம். என்றென்றல், நடிப்பு என்பது அவர்களின் தொழில். ஆனால், இது பட ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சி தானே, இந்த நிகழ்ச்சியில் ஒரு ஆபாசமான உடை அணிந்து கொண்டு, ஆபாசமாக ஆடுவதால் தாலிக்கயிறு மட்டுமல்ல அங்கு பாரம்பரியமும் அசிங்கப்படுகிறது. பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது.நீங்கள் பாரம்பரியத்தை மதிக்கவில்லை, மதிக்கிறீர்கள் என்பது அடுத்த விஷயம். ஆனால், பாரம்பரியத்தை அசிங்கப்படுத்த கூடாது என்பது தான் என்னுடைய வாதம்.

keerthy suresh baby john che guevara

யார் கணவர்: கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா 110 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அவர் எந்த படத்திலும் ஆபாசமாக நடித்ததில்லை. ஆனால் அவருடைய மகள் கீர்த்தி சுரேஷ் பலவிதமான ஆபாசமான காட்சிகளில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல விதமான சர்ச்சைகளிலும் அவர் சிக்கியிருக்கிறார். இது எல்லாம் திருமணத்திற்கு முன்பு நடந்திருந்தாலும் திருமணம் ஆன பிறகு, புது தாலி உடன் வேறு ஒரு நடிகருடன் ஆபாசமான உடையில் போஸ் கொடுத்திருக்கிறார். பலர் அந்த நடிகர் தான் கீர்த்தி சுரேஷின் கணவர் என்று நினைக்கும் அளவிற்கு அந்த புகைப்படம் இருக்கிறது.

keerthy suresh baby john che guevara

மரியாதையே இருக்காது: கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து இதே போன்ற உடைகளை அணிந்து வந்தால் அவருக்கு என்று ஒரு மரியாதையே இல்லாமல் போய்விடும். அவர் பொது இடத்தில் இப்படி நடந்து கொள்ளும் போது, கீர்த்தி சுரேஷின் கணவர் தான் விமர்சிக்கப்படுவார். நயன்தாராவின் கணவரை மிச்சர் என்றும் புஷ்பா புருஷன் என்றும் பலர் விமர்சித்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் கீர்த்தி சுரேஷ் கணவரும் சேர்க்கப்படுவார். இந்த அவமானம் எல்லாம் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவால் தான் வருகிறது. அதேபோல ஆண்டனி தட்டிலும் விமர்சிக்கப்படுவார்.

keerthy suresh baby john che guevara

மிகப்பெரிய தவறு: இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் இருக்கிறது. பாலிவுட் வேறுவிதமான கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தில் போய் நம்முடைய பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் நடனம் ஆடுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும். கீர்த்தி சுரேஷ் செய்தது மிகப்பெரிய தவறு. தாலி என்பது பாரம்பரியமான ஒன்று அதற்கு அவர் மரியாதை கொடுத்தே ஆகவேண்டும் என்று சேகுவேரா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X