சமந்தா ஏமாற்றப்பட்டார்.. அவங்க நேர்மையானவங்க.. பிரபலம் செய்யும் சப்போர்ட்
சென்னை: நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. இவர் ஏற்கனவே சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவரது இரண்டாவது திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் பிரமாண்டமாக நடந்தது. இதில் திரையுலகினர் சிலரும், இரு வீட்டாரும் கலந்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க இந்தத் திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கிறார்.
சமந்தாவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவுக்கு காதல் உருவானது. அந்தக் காதலுக்கு வீட்டு தரப்பிலிருந்து பச்சைக் கொடி காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள் இரண்டு பேரும். கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் என மொத்த இரண்டு முறை அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்திவந்தார்.

திடீர் பிரிவு: சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இரண்டு பேரும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தார்கள். அந்தப் பிரிவுக்கு சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணம் என்று பலரும் சொன்னார்கள். பிரிவுக்கு பிறகு சமந்தா சிங்கிளாக இருந்தார். நாக சைதன்யாவோ பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சோபிதாவை காதலித்தார். பிறகு இந்தக் காதலுக்கும் நாகார்ஜுனா தரப்பு க்ரீன் சிக்னல் கொடுத்து நிச்சயதார்த்தத்தையும் நடத்தி வைத்தது.
நடந்த திருமணம்: அதனையடுத்து சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் கடந்த நான்காம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடந்தது. அங்கிருக்கும் நாக சைதன்யாவின் தாத்தாவான நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு சோபிதா கழுத்தில் தாலி கட்டினார் அவர்.இத்திருமணத்தில் இரு வீட்டார், நண்பர்கள் தவிர்த்து திரையுலகிலிருந்து சிலரும் கலந்துகொண்டு தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள்.
அடுத்தடுத்த படங்கள்: இதற்கிடையே சமந்தா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் சிட்டாடல் வெப் சிரீஸில் அவரது நடிப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது. அதிலும் சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் பட்டையை கிளப்பியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள். அதுமட்டுமின்றி லிப் லாக் சீனிலும் நடித்திருந்தார் சாம். சிட்டாடலில் தனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு அவரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதேபோல் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் கோரிக்கையையும் அவரது ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "சமந்தா ரொம்பவே நேர்மையானவர். அவர் நாக சைதன்யா குடும்பத்தால் ஏமாற்றப்பட்டார் என்பதுதான் உண்மை. அவருக்கு விவாகரத்தில் விருப்பமே இல்லை. சைதன்யாவின் குடும்பம் வற்புறுத்தி விவாகரத்தை வாங்க வைத்தது. சமந்தாவின் தந்தையும் இறந்துவிட்டார். அந்த சோகமும் அவருக்கு இருக்கிறது. அநேகமாக அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் தனிமை ரொம்பவே கொடுமையானது" என்றார்.


Click it and Unblock the Notifications











