அரசு நிலத்தை விலை கேட்ட விக்னேஷ் சிவன்.. நயன்தாரா ஆதங்கம்.. சேகுவேரா பேட்டி!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் சீகல்ஸ் ஓட்டலை கடந்த சில நாட்களுக்கு முன்பு விலைக்குப் பேசியதாக தகவல் வெளியாகி இணையத்தில் பேசும் பொருளானது. இதற்கு விளக்கம் அளித்த, விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டிச்சேரியில் நான் அரசு சொத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக பரவி வரும் செய்தி தவறானது. என்னுடைய 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படப்பிடிப்பு அனுமதிக்காக பாண்டிச்சேரி விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்ததாக பேசி இருந்தார்..

இது பற்றி பேசிய பத்திரிக்கையாளர் சேகுவேரா, விக்னேஷ் சிவன், அரசு நிலத்தை கேட்டதாக பரவிய செய்தி உண்மைதான், ஆனால், விவரம் தெரியாமல் கேட்டுவிட்டார். அரசு நிலத்தை வாடகைக்கு விடுவார்கள், குத்தகைக்கு எடுக்கலாம். ஆனால் அதை விலைக்கு வாங்க வேண்டும் என்றும் நினைத்தால் அது நடக்காது. அரசு நினைத்தால் தானமாகக்கூட கொடுக்கலாம். ஆனால், வாங்க முடியாது, இதில் விக்னேஷ் எந்த அடிப்படையில் கேட்டார் என்று தெரியவில்லை.

Nayanthara vignesh shivan che guvera

நயன்தாராவின் ஆதங்கம்: மேலும், விக்னேஷ் சிவன் நயந்தாராவின் கணவர் என்பதாலேயே அவர் குறித்து பலவிதமான சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை தான் சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா அளித்த பேட்டியில், நாங்கள் ஒன்றாக இல்லாமல் திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் இல்லையென்றால், அவருக்கு சொந்தமாக பெயர் இருந்து இருக்கும் என்று கூறியிருந்தார். அதற்கு காரணம் விக்கி இயக்குநர் என்பதை தாண்டி நயன்தாரா கணவராக சுருங்கி விட்டார் என்ற ஆதங்கத்தில் கூட பேசி இருக்கலாம்.

விரைவில் வழக்கு: நயன்தாராவிற்கு பல விஷயத்தில் சகிப்புத்தன்மை வேண்டும், பல சர்ச்சைகளை அவரே உருவாக்கி பலருக்கு தீனி போட்டு விடுகிறார். அவர் பேசியதை வைத்து, வலைப்பேச்சில் இருப்பவர்கள் விமர்சனம் செய்து பேசி வருகின்றனர். விரைவில் அவர்கள் மீது நயன்தாரா வழக்கு தொடர இருக்கிறார். அதற்கான ஆதாரங்களை அவர் திரட்டி வருகிறார். இது எதற்கு யார் மீதும் தனிப்பட்ட வன்மம் எதற்கு என்று சேகுவேரா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X