’தளபதி 64’ல் விஜய்யின் ஸ்டன்னிங் ஆன லுக் இதுதான்.. வைரலாகும் புகைப்படம்!

Recommended Video

Thalapathy 64 release date: மீண்டும் இருவர் தளபதி 64யில் இணைந்துள்ளனர்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

'தளபதி 64' படத்தில் விஜய்யின் லுக் குறித்து லீக்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், தயாரிப்பாளருடன் விஜய் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் 'தளபதி 64' படத்தில் விஜய் இந்த ஸ்டன்னிங் ஆன லுக்கில் தான் இருக்கிறார் என்பதை தெள்ளத் தெளிவாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளது.

இந்த புகைப்படம் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஷிவமோகா

சென்னை, டெல்லியை தொடர்ந்து வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ‘தளபதி 64' படக்குழு கர்நாடகாவில் உள்ள ஷிவமோகாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்துகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் விஜய்யுடன் மோதும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷிவமோகாவில் தொடர்ந்து 50 நாள் ஷூட்டிங் நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

திடீர் சந்திப்பு

'தளபதி 64' தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யை திடீரென சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ளார். பதிலுக்கு நடிகர் விஜய் தயாரிப்பாளருக்கு சால்வை அணியும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. டெல்லி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் விஜய்யை திடீரென சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் சேவியர் பிரிட்டோ.

துப்பாக்கிக்கும் மேல

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் மற்றும் தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் கைதி படங்கள், செம்ம க்ரிப்பாக, ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் ஏற்படும் வகையில் எடுக்கப்பட்டிருந்ததால், தளபதி 64 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ‘தளபதி 64' படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்துக்கும் மேல இருக்கும் என ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சும்மா கிழி

விஜய் ரசிகர் ஒருவர் நேற்று வெளியான தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலின் விஜய் வெர்ஷனை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இந்த பாடல் வீடியோ விஜய் ரசிகர்களிடையே வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு ரோஸ் கிடைச்சாலும்

'தளபதி 64' படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தளபதி விஜய்க்கு வழங்கிய பூங்கொத்தில் ஒரு ரோஸ் கிடைச்சாலும் பத்திரமாக வைத்திருப்பேன் என விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X