விட்டா அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போல.. சமையலை தாண்டி குட்டி விமானத்தை ஓட்டும் மாதம்பட்டி ரங்கராஜ்!

சென்னை: பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகார் அளித்தது மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் தொடர்ச்சியாக மாதம்பட்டி ரங்கராஜை விமர்சித்து பதிவுகளை போட்டு வந்தார். தற்போது அவர் அடங்கி இருக்கும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது இன்ஸ்டாகிராமில் விதவிதமான ரீல்ஸ் போட்டு வருகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் 2023 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கருவுற்ற நிலையில், தன்னிடமிருந்து விலகியதாக ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது. அதில், விசாரணை முடிந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிஸ்டில்லாவை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

Chef Madhampatti Rangaraj s Private Jet Ride Video Goes Viral on Instagram
Photo Credit:

ஜாய் கிரிஸில்டா : இதை திட்டவட்டமாக மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், நான் ஜாயை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, குழந்தைக்கு DNA test எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால், அந்த அறிக்கை வெளியாகி பல மாதத்திற்கு மேலான போதும், மாதம்பட்டி இதுவரை டெஸ்ட் எடுக்க வரவில்லை என ராகா ரங்கராஜின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை. DNA test எடுக்க சொன்னவர் இப்போது தலைமறைவாக உள்ளார். இவரை ஈவண்டில் யாராவது பார்த்தால் உடனே எனக்கு DM செய்யவும். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம், அதான் ஓளிந்து ஓடுகிறார் என தொடர்ந்து அவரை துரத்தி வந்த ஜாய் இப்போது நான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்.

வானத்தில் பறக்கும் மாதம்பட்டி: தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ரக விமானத்தில் பறக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சமையல் துறையிலிருந்து இப்போது விமானத்தில் பறக்கும் பழக்கத்துக்கு அவர் வந்துவிட்டாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X