Madhampatty Rangaraj: மாதம்பட்டி பெயர் காரணம்.. வெளிப்படுத்திய மாதம்பட்டி ரங்கராஜ்.. சூப்பரப்பு!
சென்னை: பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் இன்றைய தினம் விஜய் டிவியின் முதல் வணக்கம் நிகழ்ச்சியில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தன்னுடைய சீக்ரெட் ஆஃப் சக்ஸசை அவர் இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய மாதம்பட்டி என்ற ஊர் பெயருக்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னுடைய பிசினஸில் சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்துகிறேன் என்றும் சிறுவாணி தண்ணீர் தன்னுடைய சமையலில் எப்படி சுவையை கூட்டுகிறது என்றும் அவர் அடுத்தடுத்த விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் அவர் நடுவராக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 5: விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5 துவங்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் கடந்த நான்கு சீசனங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். குறிப்பாக செஃப் வெங்கடேஷ் பட், குக்குகளையும் கோமாளிகளையும் வைத்து செய்து வந்தார். அவரது பிரசன்ஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அட்ராக்ஷனை கொடுத்தது என்றே கூற வேண்டும். இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐந்தாவது சீசனில் அவர் விலகியுள்ளார். அவர் சன் டிவியில் துவங்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்: இந்நிலையில் அவருக்கு பதிலாக பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். அவர் சமையலையும் சிறப்பான தொழிலாக மேற்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணமாக காணப்படுகிறார். விஐபி வீட்டு திருமணமா கூப்பிடு மாதம்பட்டி ரங்கராஜை என்று கூறும் அளவிற்கு அவரது புகழ் சமையல் தொழிலில் மிகச் சிறப்பாக காணப்படுகிறது. மேலும் அவர் இது மட்டுமின்றி பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் உணவு வழங்கும் பிரம்மாண்ட கிளவுட் கிச்சன்களை நடத்தி வருகிறார்.
ஹெலிகாப்டர் வாங்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ்: இவர் மிகப்பெரிய பணக்காரர் என்பதும் பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கப் போவதாகவும் தனது சமீபத்திய பேட்டியில் ரங்கராஜ் பெருமையுடன் கூறியுள்ளார். மேலும் தனக்கு நேரம் தான் முக்கியம் என்றும் முக்கிய நகரங்களுக்கு சமையல் செய்யப் போகும்போது விமானத்தில் சென்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ள ரங்கராஜ், ஆனால் சிறிய ஊர்களுக்கு செல்லும்போது காரில் செல்ல அதிக நேரம் எடுப்பதாகவும் அதனால் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்துக் கொண்டே செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சக்சஸ் சீக்ரெட்: அதனால் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நிமிடத்திற்கும் என்ன மதிப்பு என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் 10 வருடம் கழித்து தன்னுடைய நேரத்தின் மதிப்பு மேலும் உயரும் என்றும் அதனால் நேரத்தை மிச்சப்படுத்த ஹெலிகாப்டர் வாங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய சக்சசின் சீக்ரெட்டை அவர் விஜய் டிவியின் முதல் வணக்கம் நிகழ்ச்சியில் இன்றைய தினம் பகிர்ந்துள்ளார். கடந்த 1982ல் தன்னுடைய அப்பா லட்சுமி கேட்டரிங் என்ற சமையல் கேட்டரிங் துவங்கியதாகவும் தற்போது அந்த நிறுவனத்தில் தாங்கள் 41 வருடங்களை நிறைவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதம்பட்டி பெயர் காரணம்: தன்னுடைய குடும்பத் தொழிலை ஏற்று நடத்துவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என்றும் ரங்கராஜ் கூறியுள்ளார். தங்கள் ஊர்களில் சமையல்காரர்களை அவர்களின் ஊரை வைத்து தான் குறிப்பிடுவார்கள் என்றும் ஆனால் மாதம்பட்டி என்ற தன்னுடைய ஊரை தன்னுடைய பெயருக்கு முன்னதாக இணைக்க தான் ஐந்து வருட காலங்களை எடுத்துக் கொண்டதாகவும் இந்த ஐந்து வருடங்களில் அந்த பெயருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தன்னை முன்னேற்றியதாகவும் ரங்கராஜ் தெரிவித்துள்ளார். தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் என்பது தன்னுடைய அடையாளமாக மாறி உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











