கடவுளே என்ன ஆகியிருக்குமோ.. நூலிழையில் உயிர் தப்பிய மகள்.. வெங்கடேஷ் பட் வேதனை!
சென்னை: பிரபல சமையல் கலை நிபுணரான வெங்கடேஷ் பட் மாலில் தனது மகளுக்கு நடந்த விபரீத விபத்து குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவி ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி. சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வெங்கடேஷ் பட்.

கடந்த நான்கு சீசன்களாக குத் வித் கோமாளி நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் மற்றும் தாமுவுக்கு இணையத்தில் தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.
வெங்கடேஷ் பட்: இந்நிலையில் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு நானும் என் மகளும் வந்திருந்தோம். அப்போது, எஸ்கலேட்டரில் எனது மகளின் கால் சிக்கிக் கொண்டது. நான் அவளின் கையை பிடித்து இழுத்ததால் அவளின் கால் தப்பித்தது. நல்லவேலையாக இழுத்து என் மகளை காப்பாற்றினேன்.

கவனமாக இருங்கள்: நான் மட்டும் என் மகளை இழுக்கவில்லை என்றால், என் மகளின் கால் துண்டாகி இருக்கும். இதுகுறித்து பீனிக்ஸ் மாலின் நிர்வாகத்திற்கு புகார் கொடுத்திருக்கிறேன். குழந்தைகளோடு வரும் அனைவரும் கவனமாக இருங்கள் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி அனைவரும் உங்கள் மகளுக்கு என்ன ஆச்சு என்று கேட்டு வருகின்றனர்.
அனைவருக்கும் நன்றி: இதையடுத்து, சற்று முன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட வெங்கடேஷ் பட், நான் வெளியிட்ட செய்தியைப் பார்த்து பலரும், என் மகள் எப்படி இருக்கிறார் என்று கேட்டார்கள். அவர் நன்றாக இருக்கிறார். அந்த வீடியோவை வெளியிட முக்கியமான நோக்கமே மற்ற யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான், இதுகுறித்து பீனிக்ஸ் மாலின் நிர்வாகம் என்னை தொடர்பு கொண்டு, அடுத்து எடுத்திருக்கும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பேசினார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











