உங்களை மிஸ் பண்றோம்.. வெங்கடேஷ் பட்டை நினைத்து உருகும் பேன்ஸ்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் சீரியல், கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ என எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக இருப்பது குக்வித் கோமாளி நிகழ்ச்சிதான். நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், ஐந்தாவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் செஃப் வெங்கடேஷ் பட் இல்லாதது அவரது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மில்லியன் கணக்கான மக்களை மகிழ்ச்சியடையச் செய்த இந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து ஓய்வு எடுக்கப்போவதாக வீடியோ வெளியிட்டு விலகினார். தற்போது அவருக்கு பதிலாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக என்ட்ரி கொடுத்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 5: இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது. இதில் தொகுப்பாளராக ரக்ஷனும் மணிமேகலையும் உள்ளனர். நடிகை சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, யூடியூபர் இர்ஃபான், அக்ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த சீசனில் குக்குகளாக களமிறங்கி உள்ளனர். கோமாளிகளாக புகழ், குரேஷி, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி உள்ளிட்டோர் உள்ளனர்.
உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்: நேற்று ஆட்டம் பாட்டத்துடன் நிகழ்ச்சி ஒளிபரப்பான நிலையில், செஃப் வெங்கடேஷ் பட்டின் ரசிகரான ஒருவர், உங்களை பற்றியோ உங்களை மிஸ் பண்றோம்னு ஒருத்தர் கூட நேற்று ஷோல சொல்லவே இல்ல. அப்படி என்ன சார் மனுஷங்க. ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நீங்க வளர்த்துவிட்ட நிகழ்ச்சில, உங்கள மிஸ் பண்றோம்னு ஒருத்தர் கூட பேசல. இதுதான் உலகமா, ஒருவேளை உங்களை பத்தி பேசக்கூடாது என்று சேனல் சொல்லி இருக்கலாம். ஆனால், உங்களின் பேன்ஸ் ரொம்ப பீல் பண்றோம் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











