நான்தான் ஷாலினி பின்னாடி போய் ஐ லவ் யூ சொன்னேன்.. அஜித்தின் காதல் கதை.. வெங்கடேஷ் பட் சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் அவரது ரீ என்ட்ரி படமாக வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் கேமியோ கேரக்டரில் அசத்தியிருப்பார் அஜித். தன்னுடைய கேரக்டர்களால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டுவரும் அஜித் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையிலும் படத்தின் சூட்டிங்கை தொடர்வதில் சில பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில் கடந்த மாதத்தில்தான் சூட்டிங்கை படக்குழுவினர் நிறைவு செய்தனர். இந்தப் படம் வரும் டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாகவோ வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் இந்த ஆண்டில் டிசம்பர் வெளியீடாகவோ அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாகவோ வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் முன்னதாக இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தாமதத்தால் இந்தப் படம் மே மாதம் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அஜித் -ஷாலினி காதல் கதை: நடிகர் அஜித் -ஷாலினி காதல் கதை கோலிவுட்டில் மிகவும் பிரபலமானது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகிய ஷாலினி, தொடர்ந்து நல்ல மனைவியாக சிறப்பான அம்மாவாக தொடர்ந்து வருகிறார். தன்னுடைய குழந்தைகளின் பள்ளி விழாக்களிலோ, புது படங்களின் ரிலீசின்போதோ இவரை பொதுவெளியில் பார்க்க முடிகிறது. தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அஜித் -ஷாலினியின் காதல் தற்போதும் தொடர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
அஜித் காதல் கதையை பகிர்ந்த வெங்கடேஷ் பட்: கடந்த 2000ம் ஆண்டில் அஜித் -ஷாலினி திருமணம் சென்னையில் மிகவும் சிறப்பாக நடந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது 24வது திருமண நாளை இந்த ஜோடி சிறப்பாக கொண்டாடியது. இந்நிலையில் பிரபல செஃப் வெங்கடேஷ் பட் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி குறித்து தன்னுடைய பேட்டியொன்றில் பேசியுள்ளார். தீனா ரிலீசின்போது தான் தென்னிந்திய சமையல் கலைஞராக பணியாற்றிய பிரபல ஹோட்டலுக்கு ஷாலினியுடன் அஜித் வந்ததாகவும், அவரிடம் தான் அவர்களில் யார் முதலில் காதலை கூறினார்கள் என்று கேட்டதாகவும் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
வெங்கடேஷ் பட் நெகிழ்ச்சி: தல என்று ரசிகர்களால் அப்போதே அஜித் கொண்டாடப்பட்டதாகவும் அவர் நினைத்திருந்தால் தன்னுடைய கேள்வியை தவிர்த்திருக்கலாம் என்றும் ஆனால் ஒரு நண்பனிடம் பேசுவது போல, ஷாலினி எங்கங்க காதலை சொன்னாங்க, நான் தான் அவங்க பின்னாடி போய் ஐ லவ் யூன்னு சொன்னேன் என்றும் அஜித் கூறியதாகவும் வெங்கடேஷ் பட் தன்னுடைய நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். ஒரு மனிதனின் புகழ் அவனின் புத்தியை மாற்றாத நிலையில் அவர் கடவுளுக்கு சமமானவராக மாறிவிடுவார் என்று கூறிய வெங்கடேஷ் பட், அந்த தன்மையை தான் அஜித்திடம் பார்த்ததாக மேலும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











