கீர்த்தி சுரேஷுக்கு அவரது கணவர் அடிமையா?.. மிக்சரா இருக்காராம்.. ஓவராக பேசிய பிரபலம்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த 12ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். கோவாவில் அவர்களது திருமணம் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் நடந்தது. திருமணத்துக்கு பிறகு பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் மிகவும் தீவிரமாக செயல்பட்டார் கீர்த்தி. அந்த ப்ரோமோஷனுக்கு வரும்போது கழுத்தில் தாலியுடனும், கவர்ச்சி உடையுடனும் வந்தார். சூழல் இப்படி இருக்க அதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்தது. அதில் விஜய், திரிஷா, அட்லீ என பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. திருமணத்துக்கு பிறகு பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக கலந்துகொண்டார் அவர். இந்நிலையில் அவர் அப்படி கலந்துகொண்டது குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

சேகுவேரா பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சினிமாவில் இருப்பவர்களின் பல சீன்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கீர்த்தி சுரேஷ் தாலி கட்டிக்கொண்டிருக்கும் சீன் ரொம்பவே ஓவராக இருக்கிறது. அவரிடம் இந்தத் தாலி மாட்டிக்கொண்டு படாத பாடு படுகிறது. திருமணம் முடிந்த கையோடு படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. தாலி என்பது ரொம்பவே பாரம்பரியான ஒன்று. அதை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்றால் பாரம்பரிய உடையைத்தான் அணிய வேண்டும்.
ஆண்டனி ஒரு மிக்சர்: கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்திருக்கும் ஆண்டனி தட்டில் இன்னொரு விக்னேஷ் சிவனா இல்லை மிக்சரா என்று தெரியவில்லை. மனைவியின் பேச்சை கேட்டுக்கொண்டு அப்படியே நடந்துகொள்ளும் ஆள்தான் மிக்சர். அந்த அர்த்தத்தில்தான் நான் சொல்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அவர் அடிமையாக இருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. கீர்த்தி சுரேஷுக்கு வீட்டில் இருப்பவர்கள் சொல்லி புரிய வைக்க வேண்டும். அவரது தாய் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. பாரம்பரியத்தை மதிக்கவில்லை என்றாலும் அசிங்கப்படுத்தக்கூடாது.
நயனின் லிஸ்ட்: தான் இந்தந்த நபர்களுடன் லிவிங்கில் இருந்தேன் என்று நயன்தாரா லிஸ்ட் போட்டார். இங்கே நடிகைகளை திருமணம் செய்துகொள்ளும் பெரும்பாலான தொழிலதிபர்கள் மிக்சர்களாகவும், அடிமையாகவும்தான் இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் மற்றவர்களின் கவனத்தை தனது பக்கம் திருப்புவதற்காகத்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார். நமீதாவும் இதே பாணியைத்தான் பின்பற்றினார். இதனையெல்லாம் இவர்களிடம் யார் கேட்டது.
சிம்ரன் அப்படி இல்லை: ஆனால் சிம்ரன் அப்படி இல்லை. அவர் நடிக்கும்போது கிளாமராகவும்தான் நடித்தார். ஆனால் திருமணம் முடிந்த பிறகு அப்படியே மாறிவிட்டார். சந்திரமுகி வாய்ப்பையே தான் கர்ப்பமாக இருப்பதால் மறுத்துவிட்டார். அவர் எல்லாம் இப்படி நடந்துகொண்டதே இல்லை. சிம்ரன் மாதிரியான நடிகைகள் சினிமாவில் சிலர்தான் இருக்கிறார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்யும் விஷயம் அவருடைய கணவரை நேரடியாகவே பாதிக்கிறது. கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு முன்பு எவ்வளவோ அசிங்கப்பட்டார். திருமணத்துக்கு பிறகும் இப்படி நடந்துகொண்டால் என்ன அர்த்தம்" என்றார்.


Click it and Unblock the Notifications











