தனுஷ் மாதிரி இல்லை.... ஜெயம் ரவிக்கு விருப்பமே இல்லை.. மாமியார் காரணம்?.. சேகுவேரா பிரத்யேக பேட்டி

சென்னை: கோலிவுட்டில் கடந்த சில காலமாக நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து அதிகரித்திருக்கிறது. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி தம்பதியும் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இப்போது ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் இவ்விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.

ஜெயம் ரவிதான் நேற்றிலிருந்து கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார். 15 வருடங்களாக வாழ்ந்து வந்த திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கடந்த சில காலமாகவே அவருக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவல்கள் வதந்தியாக இருக்க வேண்டும் என்ற ஆர்வமும், எண்ணமும் ரசிகர்களிடையே இருந்தது.

jayam ravi aarthi exclusive

ஜெயம் ரவியின் அறிக்கை: ஆனால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், " வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்வாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார் ரவி. அதேசமயம் ஆர்த்தி இதுவரை அமைதியாகவே இருக்கிறார்.

சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இந்த விவகாரம் குறித்து ஃபில்மிபீட் தமிழுக்கு அளித்த பேட்டியில், "ஜெயம் ரவி இயல்பாகவே ரொம்ப சாஃப்ட்டான மனிதர். அவரது அறிக்கையில் திருமண வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். பிரிகிறேன் என்று சொல்லவில்லை. எனவே அவருக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை என்பதுபோல்தான் எனக்கு தோன்றுகிறது. அவர் இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

தனுஷ் மாதிரியா?: மேலும் இதற்கு காரணமாக ஜெயம் ரவிக்கு இன்னொருவருடன் தொடர்பு இருக்கிறது என்ற பேச்சும் எழவில்லை. அதேசமயம் தனுஷ் விவகாரத்தில் அவர் பெயர் நாறியது. அதை தனுஷ் மறுக்கவும் இல்லை. தனுஷ் மாதிரி ரவி இல்லை. ரவியின் மாமியார் ரவிக்காக கதை கேட்பது, இயக்குநர்களை முடிவு செய்வது என்று ஓவர் தலையீடு செய்ததாகவும் அதனால் பிரச்னை ஆரம்பித்ததாகவும் சொல்கிறார்கள். ஆர்த்தி இதுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ரவியின் பெயரை நீக்கவில்லை. இருந்தாலும் தம்பதிக்குள் உறவு இறுக்கமாக இருக்க வேண்டும். ஆர்த்தி நேராக நீதிமன்றம்தான் செல்வார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X