எக்ஸ்க்ளூசிவ்: யோகிபாபு மீது சாதிய வன்மத்தை கொட்டுகிறார்கள்.. வலைப்பேச்சை விளாசிய சேகுவேரா
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் யோகிபாபு. அவரது கவுண்ட்டர்களும், டைமிங் சென்ஸும் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைப்பவை.லொள்ளு சபாவின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு பெரிய திரைக்கு வந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த யோகிபாபு இப்போது இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நகைச்சுவை செய்துவிட்டார்.

ஹீரோ: காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மாவீரன், ஜெயிலர்: அதனை தொடர்ந்து அவர் நடித்த கூர்கா உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் அவர் மாவீரன் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மாவீரன் படத்தில் யோகிபாபுவின் டைமிங்கும் கவுண்ட்டர்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. அதேபோல் ஜெயிலர் படத்திலும் நல்ல விதமாகவே காமெடி செய்திருந்தார்.
பிற மொழிகளிலும்: தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார் யோகிபாபு. அந்தவகையில் மலையாளத்தில் அவர் கடைசியாக குருவாயூர் அம்பல நடையில் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் ஹிந்தியிலும் தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படும் யோகிபாபு; தமிழில் டஜன் கணக்கில் படங்களை வைத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் சட்னி சாம்பார் வெப் சீரிஸ் வெளியானது.
பிரச்னை: சூழல் இப்படி சில வாரங்களுக்கு முன்பு யோகிபாபு அளித்திருந்த பேட்டியில் சிலர் தங்களை கவனிக்கவில்லை என்று கூறியதாக தெரிவித்தார். இதனையடுத்து வலைப்பேச்சு அந்தணன், பிஸ்மி, சக்திவேல் ஆகியோர் அடுத்த வீடியோவை வெளியிட்டனர். அதில் யோகிபாபு குறித்து ஏராளமான விஷயங்களை பேசினர். மேலும் அவரை ஈத்தரை, குப்பை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியும் கடுமையாக விமர்ச்னாம் செய்தார்கள். முக்கியமாக தன்னை தொடக்கூடாது என்று அஜித் சொன்னதாக யோகிபாபுதான் எங்களிடம் சொன்னார் என்றும்; முருகன் கோயிலுக்கு வந்து சத்தியம் செய்ய முடியுமா என்றெல்லாம் பேசினார்கள்.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தமிழ் ஃபில்மிபீட்டுக்கு அளித்த பேட்டியில், "வலைப்பேச்சு அந்தணன், பிஸ்மி, சக்திவேல் ஆகிய மூன்று பேருமே ஓவராக பேசுகிறார்கள். இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா. இவர்கள் எப்படி துபாய் போனார்கள். அங்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்று நான் பேசவா. பேசினால் தாங்காது. யோகிபாபுவை அந்தணன் ஈத்தரை என்று சொன்னதை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் இதை நான் பெரிய அளவில் கொண்டு செல்வேன்.
கோபுரத்தில்தான் இருக்கிறார்: பிஸ்மியோ யோகிபாபுவை குப்பை என்று சொல்கிறார். அப்படி சொல்வதற்கு நீங்கள் யார். இந்த இடத்துக்கு யோகிபாபு வருவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். எனக்கு 30 வருடங்களாக யோகிபாபுவை தெரியும். கோபுரத்தில் குப்பை இருக்கிறது என்பதை சொன்ன பிஸ்மி, எப்படியோ யோகிபாபு கோபுரத்தில் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொண்டார்தான் அல்லவா. இவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டிருக்கிறார்கள்.
யோகிபாபுதான் அஜித் அப்படி சொன்னதாக இவர்கள் சொல்கிறார்களே இவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது அதற்கு. அஜித் யோகியிடம் வேறு எதற்காகவோகூட அப்படி சொல்லியிருக்கலாம். ஒரு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு இடையே எவ்வளவோ இருக்கும். அதை அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள். இடையில் இவர்கள் யார். யோகிபாபு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர். அதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் மீது சாதிய வன்மத்தை கொட்டுகிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











