செக்கச் சிவந்த வானம் விஜய் நடிக்க வேண்டிய படமாம்..! ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு..!

செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னை: அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவின்ந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் சங்கமித்துள்ள படம் செக்க சிவந்த வானம்.

Chekka Chivantha Vaanam Hero was Vijay!

இந்த திரைப்படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து பெரிய பட்ஜட்டில் படம் இயக்க வேண்டுமென மணிரத்னம் ஆசைப்பட்டார். அதற்கு அவர் எடுத்துக்கொண்டது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க திட்டமிட்ட மணிரத்னம் அதற்கான வேலைகளில் இறங்கினார். எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கும் வேலையிலும் இறங்கினர். அந்த நாவலில் வரும் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக இருந்தது.

படிக்கும்போதே வரிக்கு வரி பிரம்மிப்பை ஏற்படுத்தக்கூடியது பொன்னியின் செல்வன். படித்தவர்களின் அந்த பிரம்மிப்பு உணர்வை காட்சிப்படுத்த நிறைய மண்டபங்கள், கோவில்கள் முக்கியமாக தண்ணீர் பாயும் ஆறுகள் என லொகேஷன் தேவைப்பட்டது. படத்தை செட் போடாமல் எடுப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதாலும், எல்லாவற்றையும் செட் போட்டு படமாக்கினால் பட்ஜெட் எகிரும் என்பதாலும் அந்த முயற்சியை மணிரத்னம் கைவிட்டார். (பாகுபலி பட்ஜெட்டை விட அதிகமாக வேண்டும்)

பிறகு, விஜய் மகேஷ் பாபு என இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து மாஸ் ஹிட் கொடுக்க நினைத்த மணிரத்னம், காற்று வெளியிடை திரைப்படத்திற்கு பிறகு ஒரு கதையை தயார் செய்தார் அந்தக் கதைதான் இப்போது ரிலீஸ் ஆக உள்ள செக்க சிவந்த வானம். கால்ஷீட் பிரச்சனை பட்ஜெட் என பல்வேறு காரணங்களால் மகேஷ்பாபுவையும் விஜய்யையும் இணைத்து பார்க்க முடியவில்லை. ஆனாலும், அதை ஈடுகட்டும் விதமாக அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு என புது ரூட் பிடித்துவிட்டார்.

விஜய் மகேஷ்பாபுவை இணைக்கும் அந்த ஆசை நிறைவேற மணிசாருக்கு வாழ்த்துச் சொல்வோம். மணிரத்னம் தயாரித்த நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X