பாகுபலியாக மாறிய சிம்பு! செக்க சிவந்த வானம் மாஸ் டிரைலர்!
செக்க சிவந்த வானம் இரண்டாவது டிரைலரை சிம்பு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
Recommended Video

சென்னை: செக்க சிவந்த வானம் இரண்டாவது டிரைலரை சிம்பு ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் முதல் டிரைலர் வெளியானபோது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இரட்டிப்பானது.
தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது டிரைலர் முழுக்க முழுக்க எஸ்டிஆர் டிரைலராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. நானும் பேசுறேன், சிரிக்கிறேன், நடக்குறேன், ஆனா திரும்பத் திரும்ப இந்த ஒரு கேள்விதான் எனக்குள்ள ஓடிகிட்டே இருக்கு என ஆரம்பிப்பதிலிருந்து, அண்ணா இதை ஆரம்பிச்சு வச்சது நீ...மறந்துடாத என சிம்பு பேசுவது.. விஜய் சேதுபதியும் சிம்புவும் ஒன்றாக நடந்து வருவது போன்ற காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரசூல்
டிரைலரில் அதிகமாக விரும்பப்படுவது விஜய் சேதுபதியும் சிம்புவும் ஒரே ப்ரேமில் வரும் காட்சிதான். சிம்பு பிரகாஷ் என்ற ரசிகர் எத்தி விழா தொடங்கிவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
ஆரம்பிச்சு வச்சது
சிம்பு ரசிகர் ஒருவர், காரின் அருகே சிம்பு புல்லட்டிலிருந்து தப்பிப்பது, பிறகு கேமரா முன்பு.. அண்ணா இதை ஆரம்பிச்சு வச்சது நீ என அரவிந்த் சாமிக்கு பேசுவது போன்ற காட்சிகளை மட்டும் கட் செய்து, "அடுத்த வாரம் நமக்கு செம்ம எண்டர்ட்டையின்மெண்ட் மா" என விஜய்யை வைத்து மீம் போட்டுள்ளார்.
அதுபோல பலரும் விஜய் சேதுபதியும், சிம்புவும் ஒன்றாக நடந்துவரும் காட்சியையும், ஆரம்பிச்சு வச்சது நீ என்ற டயலாக்கையுமே அதிகமாக பகிர்கின்றனர்.
எதிர்பார்ப்பு
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக உள்ளது என பில்லா ராகவன் என்பவர் ட்வீட் செய்து எஸ்டிஆர் கம்பேக் என ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
பாகுபலி
செக்க சிவந்த வானம் இரண்டாவது டிரைலரைப் பார்த்த ரடிகர் ஒருவர், எல்லாவற்றுக்கும் மேலே போய், சிம்புவை பிரபாஸுடன் ஒப்பிட்டுள்ளார். பாகுபலி படத்தில் பிரபாஸ் அரண்மணையைவிட்டு வந்த உடன், ஒருவர் "தலைவன் வந்திட்டான் கொண்டாடுங்கலே" என்று சொல்லும் காட்சியை சிம்புவைப் புகழ பயன்படுத்தியுள்ளார்.
சிறப்பு
ஆக்ஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக உள்ளதாக தரணி என்பவர் தெரிவித்துள்ளார். டாப் நோட், டெர்ரிஃபிக் ட்ரெயிலர், என்ன ஒரு மேக்கிங் என வியந்து பாராட்டியுள்ளார்.
வசீகரிக்கும் குரல்
நானும் பேசுறேன்... சிரிக்கிறேன்.. என ஆரம்பிக்கும் சிம்பு வசனத்தை பதிவிட்டு தலைவனின் வசீகரிக்கும் குரல்...! ப்பா.... என யங் நரேஷ் எஸ்டிஆர் என்ற ரசிகர் பதிவிட்டுள்ளார்.
மணிரத்னம்
செக்க சிவந்த வானம் டீசரை பதிவிட்டுள்ள ரசிகர், இதை பார்க்கும்போது மணிரத்னம் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளதாக தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பார்ப்பவர்கள் அதிசயிக்க தக்க வகையில் இருக்கப்போகிறது எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











