தீபிகா படுகோனை "திருமணம்" செய்யப்போகும் விஜய் சேதுபதி..!
சென்னை: விஜய் சேதுபதிக்கும் தீபிகாபடுகோனுக்கும் திருமணம் என விஜய் சேதுபதி தெரிவிக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அருண்விஜய், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம்.

சமீபத்தில் வெளியான இரண்டு ட்ரெயிலருமே மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டன. அதுவும் இரண்டாவதாக வெளியான டிரைலர் பார்ப்பதற்கு சிம்புவுக்காகவே பிரத்யேகமாக கட் செய்யப்பட்டது போல் இருந்தது.
குறிப்பாக சிம்புவும், விஜய் சேதுபதியும் ஒன்றாக நடந்துவரும் காட்சி மற்றும், அரவிந்த் சாமியிடம் "இதை ஆரம்பித்து வச்சது நீ.. " என பேசும் வசங்கள் பெரிதும் கொண்டாட்டப்பட்டன. அதிகம் பேர் ஷேர் செய்தனர்.
இப்போது நடிகர் விஜய் சேதுபதி அவருக்கான ஸ்னிக் பீக்-ஐ பகிர்ந்துள்ளார். அதில் ஒரு தாத்தாவுடன் பைக்கில் வந்து விஜய் சேதுபதி இறங்குகிறார். அப்போது ஒரு பாட்டி இருவரும் குடிச்சிட்டு வந்துருக்கீங்களா? எனக் கேட்கிறார்.
அதற்கு பதிலளிக்கும் விஜய் சேதுபதி, என் தாத்தா ஜீனியஸ் புரஃபஸர். நான் சஸ்பெண்ட் ஆகுற டைம் வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு சொல்ட்டு.. எனக்கும் தீபிகா படுகோனுக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி இருக்கிறார் என சொல்கிறார்.
பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வரும் வியாழக்கிழமை படம் ரிலீஸாக உள்ள நிலையில் இன்று விஜய் சேதுபதி இதை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











