செக்கச் சிவந்த வானம் ட்ரெய்லர் நாளை ரிலீஸ்: போஸ்டரில் விஜய் சேதுபதி எங்கய்யா?
சென்னை: செக்கச் சிவந்த வானம் படத்தின் ட்ரெய்லர் நாளை காலை வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, டயானா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் செக்கச் சிவந்த வானம்.
படத்தின் கதாபாத்திரங்களை தனித்தனியாக அறிமுகப்படுத்தி போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவிட்டார் மணிரத்னம்.
ஜோதிகா
அரவிந்த்சாமியும், ஜோதிகாவும் ஒரு போஸ்டரில் நெருக்கமாக இருக்கிறார்கள். மற்றொரு போஸ்டரிலோ அரவிந்த்சாமியும், அதிதி ராவ் ஹைதரியும் ரொம்ப நெருக்கமாக இருக்கிறார்கள். அப்படி என்றால் அரவிந்த்சாமி கெட்ட பயளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போஸ்டரிலேயே ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் மணிரத்னம்.
ட்ரெய்லர்
ஆகஸ்ட் 25ம் தேதி காலை 10 மணிக்கு செக்கச் சிவந்த வானம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பை வெளியிடவும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் விஜய் சேதுபதியை மட்டும் காணவில்லை. இது என்ன விளையாட்டு மணி சார்?
விஜய் சேதுபதி
போஸ்டரில் ஒரு பெரிய பட்டாளமே உள்ளது. போஸ்டரை பார்த்ததுமே அனைவரின் கண்களும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தான் தேடுகிறது. ஒரு வேளை நாம் தான் மிஸ் பண்ணிவிட்டோமோ என்று மீண்டும் ஒரு முறை விஜய் சேதுபதியை தேடினாலும் அவர் இல்லை.
அதிதி
போஸ்டரில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், மன்சூர் அலி கான் மிஸ்ஸிங். அப்படி என்றால் அவர்கள் வேறு குடும்பமா என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











