கேங்ஸ்டரும் போலீஸும்.. தோட்டாக்கள் தெறிக்க, தெறிக்க வெளியானது ‘செக்கச்சிவந்த வானம்’ டிரெய்லர்!

மணிரத்னம் இயக்கியுள்ள செக்க சிவந்த வானம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை: அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு,விஜய் சேதுபதி நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு,விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'செக்கச் சிவந்த வானம்'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.

முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அதை பார்க்கும் போதே, இந்த படம் தளபதி, நாயகன் போல மணிரத்னத்தின் தெறிக்கவிடும் ஆக்ஷன் படம் என்பது தெளிவாகிறது.

தாதா கதை:

தாதா கதை:

டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளின் படி, சேனாபதியாக நடித்துள்ள பிரகாஷ்ராஜ் ஒரு பெரிய தாதா. அவரது மூத்த மகன் அரவிந்த்சாமி, இரண்டாவது மகன் அருண் விஜய், கடைக்குட்டி சிம்பு. வரதனாக நடித்துள்ள அரவிந்த்சாமிக்கு ஜோடி ஜோதிகா. தியாகுவாக வரும் அருண் விஜய்க்கு ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ். கடைக்குட்டியாக வரும் சிம்புவின் பெயர் எத்திராஜ். அதிதி ராவுக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே கள்ள தொடர்பு இருப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

வில்லன்:

வில்லன்:

போலீஸ் அதிகாரி ரசூல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அனேகமாக படத்தின் வில்லனும் விஜய் சேதுபதிதான் போல. படத்தில் இவருக்கு ஜோடி இருப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரில் இல்லை.

மாடர்ன் வெர்ஷன்:

மாடர்ன் வெர்ஷன்:

டிரெய்லரை பார்க்கும் போது, காட்பாதர் படத்தின் மாடர்ன் வெர்ஷன் போல தெரிகிறது. மார்லன் பிராண்டோ போல சேனாபதி பிரகாஷ் ராஜ் ஒரு பெரிய மாஃபியா தலைவராக வருகிறார். அவருக்கு மூன்று மகன்கள் என பெரிய குடும்பம்.

ஆக்சன் காட்சிகள்:

ஆக்சன் காட்சிகள்:

படம் முழுக்க தெறிக்கவிடும் ஆக்சன் இடம் பெற்றிருக்கும் போல. அதேபோன்று மணிரத்னத்தின் டிரேட் மார்க் ரொமான்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது என்றே டிரெய்லரைப் பார்க்கும் போதே தோன்றுகிறது. சமீபமாக மணிரத்னம் ஓகே கண்மணி, காற்றுவெளியிடை என மிகவும் சாஃப்ட்டான படங்களையே தந்தார். ஆனால் இதிலிருந்து வேறுபட்டு செக்கச்சிவந்த வானம் இருக்கும் எனத் தெரிகிறது.

எதிர்பார்ப்பு :

இது நாயகன், தளபதி ரேஞ்சில் ஆக்ஷன் பிளாக் பஸ்டர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. நட்பு, துரோகம், பாசம், அண்ணன் தம்பி சென்டிமெண்ட் என ரசிகர்களுக்கு பல்சுவை விருந்தாக இந்த 'செக்க சிவந்த வானம்', இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X