துரோகம், வஞ்சகம், பொறாமை, ஏமாற்றம், வலி, பயம்.. மிரட்டும் மணிரத்னம்! #CCVTrailer

செக்க சிவந்த வானம் படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

சென்னை: மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு,விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் 'செக்கச் சிவந்த வானம்'. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள ஆக்ஷன் படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இசை, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் என தொழில்நுட்ப கூட்டணியும் மிக பிரம்மாண்டம்.

மணிரத்னம் படத்திற்கு எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகம். அதிலும் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

டிரெய்லரை பார்த்த பலரும் டிவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். செக்க சிவந்த வானம் டிரெய்லருக்கு கலவையான விமர்சனம் வந்துள்ளது.

வலி

செக்க சிவந்த வானம் பட டிரெய்லரை பார்க்கும் போது, துரோகம், வஞ்சகம், பொறாமை, ஏமாற்றம், வலி, பயம் என அனைத்தும் இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார். அதோடு அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என ஒவ்வொருவரின் லுக்கையும் தனித்தனியாக விமர்சித்துள்ளார்.

விக்ரமாக மாறிய விஜய் சேதுபதி

விக்ரம் வேதா படத்தில் வேதாவாக ரவுடி ரோலில் மிரட்டிய விஜய் சேதுபதி, இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதை இவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புதிரான ரசூல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் மணிரத்னம்

அரவிந்த் எனும் இவர், படத்தை பற்றி பெரிதாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். டைட்டில் கார்டே போதும் என குறிப்பிட்டுள்ள அவர், கேங்ஸ்டர் படங்களில் மாஸ்டரான மணிரத்னம் மீண்டும் வந்துவிட்டதாக கூறியுள்ளார். 'இது வெறித்தனம்.... நீங்க வாங்க மணி சார்' என அவர் தெரிவித்துள்ளார்.

காதை பொத்திக் கொள்ளுங்கள்

விஜய் சேதுபதியுடன் சிம்பு பேசும் போது துப்பாக்கியால் சுடும் காட்சியின் படத்தை போட்டு, இந்த சீனை தியேட்டரில் பார்க்கும் போது காது பத்திரம் என இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

எல்லோரும் ஆள விரும்புகிறார்கள்

நரேஷ் பரமசிவன் எனும் இந்த ரசிகர், "எல்லோரும் ஆள விரும்புவது தான் படத்தின் மையக்கரு' என தெரிவித்துள்ளார். இந்த படம் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என கூறப்படுவது உண்மையா என்றும் கேட்டுள்ளார்.

ஆக்டிங் கிங்

'செக்க சிவந்த வானம்', '96' படங்களின் டிரெய்லர்களை ஒப்பிட்டு ஆக்டிங்கில் விஜய் சேதுபதி கிங்கு என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X