தமிழ்நாடே என்னை ‘செல்லம்’னு தான் கூப்பிடுது... நான் கொடுத்து வச்சவன்: பிரகாஷ்ராஜ்
சென்னை: 'என்ன செல்லம் நீ' என கொஞ்சலாகக் கூறினாலே, போதும் உடனடியாக நமது மனக் கண்ணில் வந்து விடுவார் நடிகர் பிரகாஷ்ராஜ். அந்தளவுக்கு 'செல்லம்' என்ற வார்த்தையால் பிரபலமானவர் அவர்.
கில்லி படத்தில் த்ரிஷாவை அவர் செல்லமாக 'செல்லம்..செல்லம்' என அழைக்கும் போதெல்லாம், அவர் அப்படத்தின் வில்லன் என்பதையும் மறந்து ரசிகர்கள், பிரகாஷ்ராஜை ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இது போன்ற பாக்கியம் சில வில்லன் நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அந்த வகையில் செல்லம் என்ற வார்த்தை மூலம் பிரபலமான பிரகாஷ்ராஜ் தனது அனுபவத்தை ஒரு பத்திரிக்கையில் இப்படிப் பகிர்ந்து கொண்டுள்ளார்...

எல்லாரும் ‘செல்லம்’ தான்....
நான் எப்பவும் ஷூட்டிங் ஸ்பாட்ல லைட் மேன், மேக்கப் மேன், செட் உதவியாளர்கள் எல்லாரையும் ‘செல்லம்'னு தான் கூப்பிடுவேன்.

காப்பியடித்த தரணி....
‘இங்க வா செல்லம், இப்படி நில்லு செல்லம், செல்லம் ஏண்டா இப்படி பண்ற'னு நான் மத்தவங்களைக் கூப்பிடுறதைப் பார்த்து, டைரக்டர் தரணி அதை அப்படியே கில்லி படத்துல வச்சிட்டார்.

தமிழ்நாட்டுக்கே நா செல்லம்....
அந்த ஒரு படத்துல நான் த்ரிஷாவை ‘செல்லம்'னு கூப்பிட்டேன். இப்போ தமிழ்நாடே என்னை ‘செல்லம்'னு தான் கூப்பிடுது.

நீ என்ன பிரகாஷ்ராஜா....?
ஒரு வழக்கறிஞர் தோழி சொன்னாங்க, ‘ பிரகாஷ், நான் ரெகுலரா பூ வாங்குற அம்மாகிட்டே ஒரு ஆளு வம்பிழுத்துட்டே இருந்தான். அந்தம்மா கோபத்துல திட்டிட்டாங்க. அதுக்கு ‘கோச்சுக்காத செல்லம்'னு அவன் சொல்ல, ‘நீ என்ன பெரிய பிரகாஷ்ராஜா? என்னைச் செல்லம்னு கூப்பிடற?னு அந்தம்மா கோபப்பட்டாங்க'னு சொன்னாங்க.

நா கொடுத்து வச்சவன்....
இந்த அன்பு கிடைக்கிறாதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும். இதை விட வாழ்க்கையில வேற என்ன வேணும் செல்லம்? என பூரித்துப் போகிறார் பிரகாஷ்ராஜ்.


Click it and Unblock the Notifications











