Arnav: வேற ஒரு அர்னவ நீங்க இன்னும் பாக்கல.. அது அன்ஷிதாவுக்கு மட்டும் தான் தெரியும்.. அர்னவ் பேட்டி!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய அர்னவ் இரண்டாவது வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடிய போதும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எழுந்த கடும் விமர்சனமே, அர்னவ் வெளியேற முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அர்னவ் முதன்முறையாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகிறேன் என்றதும் எனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கமல் விலகியதும் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் விஜய் சேதுபதி சார் தொகுத்து வழங்குகிறார் என்றதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த சந்தோஷத்தோடத்தான் அந்த நிகழ்ச்சிக்குள் போனேன், ட்ராஃபியோடத்தான் வருவேன் என்று நினைத்தேன். ஆனால் ட்ராஃபியை உடைத்துவிட்டு வருவேன் என்று நினைக்கவே இல்லை. 14 நாட்களில் யாரையும் புரிந்து கொள்ளமுடியாது, என்னை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை நான் யாருக்கும் தராமல் அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், மக்கள் 25 சதவீத அர்னவைத்தான் மக்கள் பார்த்து இருக்கிறார்கள் உள்ளுக்குள் வேறு ஒரு அர்னவ் இருக்கான் அதை யாருமே பார்க்கவில்லை. அந்த அர்னவை அன்ஷித்தாவிற்கு மட்டும் தான் தெரியும்.

நான் ஃபேக் இல்ல: வீட்டில் இருந்தவர்கள் பல பேர் என்னை FaKe என்று சொன்னார்கள், ஆனால் நான் அப்படி இல்ல, ரவீந்தர் சார் கூட என்னை FaKe என்று சொன்னார். நான்,சாச்சனாவிற்கு ட்ராபியை கொடுத்தேன், அதைப்பார்த்துவிட்டு அர்னவ் சரியான FaKe என்றார். அதை யாருக்கும் தெரியாமல் தனியாக கொடுத்து இருக்க வேண்டியது தானே என்று சொன்னார். ஆனால், அதை பிளான் பண்ணி செய்யவில்லை எனக்கு தோணுச்சு அதை செய்தேன். அது மற்றவர்களுக்கு FaKe ஆக தெரிந்தால் என்னால் ஒன்னும் பண்ண முடியாது.
எனக்கு தெரியுமே: அதே போல, அன்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்துவிட்டு சர்ப்ரைஸ் என்று சொன்னதை பலர் ட்ரோல் செய்கிறார்கள். எதுவுமே தெரியாதது போல நடிக்கிறார் என்று கூறுகிறார். உண்மையில் அன்ஷிதா பிக் பாஸ் வருவது எனக்குத் தெரியும். இரண்டு பேருமே பிக் பாஸ்வீட்டில் உன் விளையாட்டை நீ விளையாடு, நான் என் விளையாட்டை விளையாடுகிறேன், பிக் பாஸ் வீட்டில் நட்பு எல்லாம் வேண்டாம் என்று முன்பே பேசிக்கொண்டோம்.அதற்கு ஏற்றார் போல ஆண், பெண் என தனித்தனியாக டாஸ்க் இருந்தது என்றார்.
ஆதரவு கொடுங்கள்: பிக் பாஸ் வீட்டில் நான் எதுவுமே செய்யாமல் இல்லை, என்னால முடிந்த அளவிற்கு டாஸ்க் விளையாடினேன், என்னை கேட்டால் பிக் பாஸ் வீட்டில் ஒன்னுமே செய்யாமல் இருப்பது சத்யாத்தான் அவரே இருக்கும் போது நான் வெளியே வந்தது தான் எனக்கு பெரிய வேதனையாக இருக்கிறது. 14 நாட்களில் ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள முடியாது நிச்சயம் வைல்டு கார்டு ரவுண்டில் வீட்டுக்குள் செல்லுவேன், அப்போது உங்களின் ஆதரவு எனக்கு நிச்சயம் எனக்கு வேண்டும், சப்போர்ட் பண்ணுங்க என்று அந்த பேட்டியில் நடிகர் அர்னவ் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











