Don't Miss!
- Finance
வேலை வாய்ப்பினை அதிகம் உருவாக்கும் துறைகளில் PLI கவனம் செலுத்தலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!
- News
தேசிய ஜனநாயக முற்போக்கு பணிமனை.. புதிய பெயர் வைத்த எடப்பாடி.. அப்போ பாஜக? என்னங்க இது.. குழப்புதே!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு செல்லம்மா சீரியல் நடிகர் அர்ணவ் மனு
சென்னை : தன்னுடைய மனைவி திவ்யாவை அடித்து துன்புறுத்தியதாக சின்னத்திரை நடிகர் அர்ணவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கர்ப்பிணியாக இருக்கும் தன்னை தன்னுடைய கணவர் அர்ணவ் அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவியும் சீரியல் நடிகையுமான திவ்யா ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அர்ணவ் மீது போரூர் மகளிர் போலீசார் வழக்கப்பதிவு செய்துள்ளனர்.
முதல் கணவரை விவாகரத்து செய்யாமலே..என்னுடன் உறவில் இருந்தார்..பகீர் ஆதாரங்கள் வெளியிட்ட அர்ணவ்!

அர்ணவ் -திவ்யா ஜோடி
சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த அர்ணவ் மற்றும் திவ்யா இருவரும் காதலித்து ஒன்றாக லைவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்துக் கொண்டனர். இடையில் சிறிது காலங்கள் சீரியல்களில் நடிக்காமல் இருந்த அர்ணவ் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.

அடித்து துன்புறுத்திய அர்ணவ்?
இந்த சீரியலில் நடிக்கும் சக நடிகையுடன் அவர் காதல்வசப்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னுடைய மனைவி திவ்யாவை விட்டு விலகும் நோக்கியல் அவருடன் தொடர்ந்து சண்டையிட்டுவரும் அர்ணவ், கர்ப்பிணியான அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தன்னுடைய கர்ப்பம் கலையும் சூழல் உருவானதாகவும் திவ்யா போரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இதையடுத்து அர்ணவ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக சம்மனும் அனுப்பியிருந்தனர். இதையடுத்து இன்று அர்ணவ் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு அவர் ஆஜராகாவிட்டால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

காலஅவகாசம் கேட்ட அர்ணவ்
இதனிடையே, தனக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதனால் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரியும் அர்ணவ், போலீசாரிடம் மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்றைய தினம் அர்ணவ் சார்பில் இதுகுறித்து அவரது வழக்கறிஞர் மனுவை ஒப்படைத்தனர்.

18ம் தேதி ஆஜராவதாக மனு
கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் 18ம் தேதி விசாரணைக்கு அர்ணவ் விசாரணைக்கு ஆஜராவார் என்று அவரது வக்கீல் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தன்னுடைய கணவர் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டிய திவ்யா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தொடர்ந்து வழக்குப்பதிவையும் மேற்கொண்டார்.

அர்ணவிற்கு சம்மன்
இந்த வழக்கிற்கு தன் தரப்பு நியாயங்களையும் வீடியோக்களையும் சேர்த்து பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார் அர்ணவ். இந்த நிலையில்தான் தற்போது இந்த வழக்கில் விசாணைக்கு ஆஜராக அர்ணவிற்கு சம்மன் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் இருவரும் தொடர்ந்து மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

அர்ணவ் -திவ்யா இடையிலான மனக்கசப்பு
ஒரே சீரியலில் நடித்து காதல் வயப்பட்ட அர்ணவ் மற்றும் திவ்யா இருவரும் இரண்டு ஆண்டுகள் லைன் இன் ரிலேஷன்ஷிப்பிலும் இணைந்து வாழ்ந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணமும் செய்துக் கொண்ட நிலையில், தற்போது இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சீரியல் வட்டாரங்களில் இவர்களது செயல்கள் அதிகமான பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.