முதல் கணவரை விவாகரத்து செய்யாமலே..என்னுடன் உறவில் இருந்தார்..பகீர் ஆதாரங்கள் வெளியிட்ட அர்ணவ்!

சென்னை : செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்,முதல் கணவரை விவாகரத்து செய்யாமலே தன்னுடன் உறவில் இருந்ததாக நடிகர் அர்ணவ் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். அந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரகசியமாக அர்ணவை திருமணம் செய்து கொண்ட திவ்யா,கடந்த மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு

வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு

இதையடுத்து நடிகை திவ்யா ஸ்ரீ கண்ணீருடன் தனது கணவர் அர்ணா அடித்து துன்புறுத்துவதாகவும், செல்லம்மாள் சீரியலில் நடிக்கும் ஒரு நடிகையுடன் தொடர்புவைத்துக்கொண்டு, அவருடன் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார். தட்டிக்கேட்டதால் கர்ப்பிணி என்றும் பார்க்காமல் தன்னை அடித்துவிட்டதாக நடிகை திவ்யா கதறி அழுதபடி கூறினார்.

5 வருடம் ஒரே வீட்டில்

5 வருடம் ஒரே வீட்டில்

நானும் அர்ணவும் ஒரே சீரியலில் நடித்தோம். அப்போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. எனக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் இந்த விஷயம் அர்ணவுக்கு தெரிந்து தான் என்னுடன் பழகினார். 5 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு வீடு வாங்கினோம். அதற்கு நான் பணம், நகைகளை கொடுத்து உதவி இருக்கிறன்.

அவருக்காக மதம் மாறினேன்

அவருக்காக மதம் மாறினேன்

5 ஆண்டு ஒன்றாக பழகிய பிறகும் மதம் மாறினாள் தான் வீட்டில் நம் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் என்றார். நானும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய பிறகு அர்ணவ் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், இப்போது அர்ணவுக்கு வேறுநடிகையுடன் தொடர்பில் இருப்பதால் என்னை உதாசீனப்படுத்துகிறார் என்றார்.

உண்மைய மறைத்துவிட்டாள்

உண்மைய மறைத்துவிட்டாள்

இந்நிலையில், நடிகர் அர்ணா அளித்துள்ள பேட்டியில், நாங்கள் இருவரும் 5 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்தோம். அவளுக்கு கர்நாடகாவில் ஏற்கனவே திருமணமானது பற்றி எனக்குத் தெரியும். ஆனால் அந்த உறவு முறிந்துவிட்டது விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறியிருந்தாள். அதன் பின்பு தான் நாங்கள் திருமணம் செய்துக் கொள்ளும் போது, விவாகரத்து பேப்பரை கேட்டேன்.

மகள் இருப்பதே தெரியாது

மகள் இருப்பதே தெரியாது

அந்த விவாகரத்து பேப்பரில் ஜனவரி மாதம் தான் விவாகரத்தானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறாள். அது மட்டும் இல்லாமல் அவளுக்கு ஒரு மகள் இருப்பதே எனக்கு தெரியாது. 6 வயதான ஜெய்ஷ்னாவை நிறைய முறை பார்த்திருக்கிறேன். வீட்டுக்கும் அழைத்து வந்திருக்கிறாள். அந்த குழந்தை யாரென நான் கேட்ட போதெல்லாம், அக்கா குழந்தை என்று சொல்லுவாள் இதுபற்றி எல்லாம் அவளிடம் விசாரித்த போதுதான் இருவருக்கும் சண்டை வந்தது.

எல்லாமே பொய்

எல்லாமே பொய்

அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைக்கவே அடித்துவிட்டதாக நாடகமாடுகிறாள் என் தாய் மீது சத்தியமாக நான் அவளை நடிக்கவில்லை என்னைதான் அவர் அடித்தாள் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் சொல்வது எல்லாமே பொய் எதற்காக இப்படி பொய் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X